Author Archives: கேப்டன் கணேஷ்

’பிரமோஸ்’ ஏவிய பத்தாம் ஆண்டு நிறைவு விழா

2001ம் ஆண்டு ஜுன் 12 ம் நாள் முதன் முதலாக ஒலியின் வேகத்தில் ஏவப்பட்டது பிரமோஸ் ஏவுகணை.  ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிக வேகத்தில் விண்ணில் பாய்ந்து இலக்கை அழிக்கும் சக்தி வாய்ந்தது பிரமோஸ் ஏவுகணை.   இதனை தரையிலிருந்து மட்டுமல்ல போர்க்கப்பலில் இருந்தும் ஏவ முடியும்.  இந்த ஏவுகணையின் தயாரிப்பு மற்றும் தரப்படுத்துதல் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பு தான் ‘பிரமோஸ் ஏவுகணைத்திட்ட அமைப்பு’ (BrahMos AeroSpace). இந்தியா மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த கூட்டுத்திட்டத்தின் ஒரு படைப்பே பிரமோஸ் ஏவுகணை.  இத்திட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் ...

Read More »

பஜனாமிர்தம்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஆறு மணிக்கு நேயர்களின் உள்ளங்களையும் இல்லங்களையும் பக்திவசப்படுத்த ஒளிபரப்பாகி வரும் புதிய நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி பஜனாமிர்தம். இறைவனை வழிபட எத்தனையோ வழிமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  அதில் இறைவனது புகழைப் பாடி வழிபடும் முறையே தலைசிறந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.  அதன்படி இருபத்தி நான்கு மணி நேரமும் ஆன்மிக நிகழ்சிகளை மட்டுமே ஒளிபரப்பி வரும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் மற்றும் ஒரு புதிய நிகழ்ச்சியாக அரங்கேற உள்ள இந்த நிகழ்ச்சி முழு ஒரு மணி ...

Read More »

பாலிமர் தொலைக்காட்சியில் ‘பாக்கெட் மணி’

பாலிமர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி தான் ‘பாக்கெட் மணி’.  கலகலப்பாக புதிய முறையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த நிகழ்ச்சி கல்லூரிகள், அடுக்குமாடிக்குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகின்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு வைக்கப்படும் போட்டியில் வெற்றிபெற்றால் உடனடியாக ரூபாய் ஐந்நுறு பரிசாக வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து நண்பர்கள் பங்கு பெறுகின்றார்கள்.  இதனால் கலகலப்புக்கு பஞ்சமில்லை.  கொடுக்கப்பட்ட கால அளவைப் பயன்படுத்தி, வெற்றி காண்பவர்கள் நண்பர்களின் ‘பாக்கெட் மணி’ ...

Read More »

“சிறப்பு முகாம் வாசிகளை விடுவியுங்கள்” – செந்தமிழன் சீமான் வேண்டுகோள்

  ”செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 13ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு – எப்போதும் கடைபிடிக்கும் சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை. தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர ...

Read More »

பிம்பம்

எல்.கே. கண்ணாடி முன் நின்றிருந்தேன் – மெல்லக்  காட்சிகள் மாறின கண்ணாடியில் – என் பின் நீ – கண்களில் காதலும் காமமும் தேக்கி.. உன்னிரு கரங்களால் என் தோள் பற்றி – புரளும் என் முடி ஒதுக்கி – அன்பாய் உன் இதழ் பதித்தாய் – மெல்ல எனை இழுக்க – கண் மூடி சிலிர்த்தேன்… இமை பிரித்து உனைப் பார்க்க முயன்ற தருணத்தில் காற்றில் கலந்து போனாய் நீ….         படத்திற்கு நன்றி : http://bluemustang5.files.wordpress.com/2011/02/native-american-love.jpg?w=949  

Read More »