Search Results for: காவிரிமைந்தன்

மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்   எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்… கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் ...

Read More »

சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

(நகைச்சுவை எழுத்தாளர், கவிஞர், நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் மறைவுக்கு வல்லமையின் ஆழ்ந்த இரங்கல். வல்லமையில் அவர் எழுதிய பல்லாயிரம் வெண்பாக்களும் சந்தப் பாக்களும் அவர் புகழையும் ஆற்றலையும் உலகிற்கு முழங்கிக்கொண்டே இருக்கும். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். வாசகர்கள், சக எழுத்தாளர்கள், நண்பர்கள், கிரேஸி மோகன் குறித்த நினைவுகளை வல்லமையுடன் பகிருமாறு அழைக்கிறோம் ([email protected])  – அண்ணாகண்ணன்) காவிரிமைந்தன் வாழ்கின்ற வாழ்க்கையில் வருகின்ற கவலைகள் வாய்விட்டுச் சிரித்தால்தான் போகும்!! ஆறறிவு மானுடர்க்கும் ஐந்தறிவு ஜீவன்களுக்கும் அடிப்படையில் வேற்றுமை அதுதானே சிரிப்பு!! பரபரப்பாய் ...

Read More »

வல்லமை இணையதளத்தில் நடத்திய மூன்று போட்டிகளில் பெறப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவம்

காவிரிமைந்தன் வணக்கமுடன் வரையும் மடல். நலம்.. நலமே நாடுகிறேன்! வல்லமை இணைய தளத்தோடு இணைந்து நான் நடத்திய போட்டிகள் மூன்று.. 1. என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைகள் பெறப்பட்டு பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தந்தது நீங்கள் அறிவீர்கள். பெற்றிட்ட கட்டுரைகளோடு இன்னும் எனது இலக்கிய வட்டத்தில் பல பிரமுகர்களிடம் இருந்து மேலும் பல கட்டுரைகள் பெற்று நூறு கட்டுரைகள் ஆக.. அவை ஒவ்வொன்றுக்கும் எனது பின்னூட்டம் சேர்த்து.. இந்தப் புத்தகத்தை.. 01.07.2017ல் சென்னையில் நடைபெற்ற கண்ணதாசன் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன்!

அன்பு நண்பர்களுக்கு காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்! மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் கட்டுரைப் போட்டியாக வல்லமையில் நாங்கள் நடத்திய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரைகள் 35 வரப்பெற்றதும் அவற்றை பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து தேர்வு தந்தமையும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன். அக்கட்டுரைகளை அடுத்து.. அவற்றை இன்னும் வளர்த்து.. இன்னபிற எழுத்தாளர்கள்.. படைப்பாளர்களிடமிருந்து பெற்று நூறு கட்டுரைகள் என்கிற அளவில்.. ஒவ்வொரு கட்டுரைக்கும் காவிரிமைந்தன் எனது பின்னூட்டம் வரையப்பட்டு… இதோ.. “என் பார்வையில் கண்ணதாசன்” என்கிற நூலாக வெளியிடப்பட இருக்கிறது.. கவியரசு கண்ணதாசன் ...

Read More »

கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீரஞ்சலி!

-கவிஞர் காவிரிமைந்தன்     “கலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன்… திரைத்துறைத் தகவல்களின் கருவூலம் விரல்நுனியில் தந்திட்ட பேரறிஞர்! இவருடனே பழகுகின்ற நாட்களையே தந்ததெல்லாம் நிச்சயமாய்ப் பாக்கியமே!! தேனொழுகப் பேசுகின்ற பண்பாளர் தினையளவும் கோபம்வரா ஓர்மனிதர்! வயதுகளைக் கடந்தபடி வரவேற்பளிப்பார்! சுயநலங்கள் இல்லாது வாழ்ந்தாரே!! கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்சார்ந்து தமிழகத்தின் தலைநகரில் சிலையமைத்தோம்! திருமகனின் பெயரில்பல விருதளித்தோம் – அதைத் திராவிட மொழிகளுக்கு வழங்க வைத்தார்!! அவர்தந்த அறிவுரையை அப்படியே ஏற்று தெலுங்கு கன்னடம் மலையாள கவிஞர்களுக்குக் கவியரசு கண்ணதாசன் விருதளித்த ஆண்டு 1994 முழுமையாய் ...

Read More »

வல்லமைக் கவிஞர்!…

பெருவை பார்த்தசாரதி   இப்பொழுதெல்லாம், எந்த ஒரு அழைப்பிதழையும் கொடுப்பதற்கும், அவ்வளவாக யாரும் நேரில் வருவதில்லை. அலைபேசியில் அழைப்பிதழின் நகல் வந்தவுடன், என்ன சார்?.. அழைப்பிதழ் வந்ததா!..கண்டிப்பாக குடும்பத்துடன் வந்துவிடுங்கள்!.. என்கிற அன்பான வேண்டுகோளுடன் முடிந்துவிடுகிறது. இப்படித்தான், கவிஞர் ரவிச்சந்திரன் எழுதி வெளியிடும் “காதல் பொதுமறை” என்கிற நூலும், இந்த நூலை அது வெளிவருவதற்கு முன்பே ஆய்வு செய்து இரண்டு ஆய்வு நூல்களாக வெளியிடுபவர் முனைவர் வைகை மலர் அவர்களும் என்பதை  அலைபேசியில் வந்த அழைப்பிதழ் மூலம் அறிந்தேன். “நூல் வெளியீட்டு விழா” அழைப்பிதழை ...

Read More »

இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?

— கவிஞர் காவிரிமைந்தன். இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா? இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரைந்த பாடல்! திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் தந்த இசையமைப்பில் முகிழ்த்ததும், பி. சுசீலாவின் குரலில் பிறந்துவந்ததும் மறக்க முடியுமா? இதய வீணைதூங்கும்போது பாடமுடியுமா? இணைந்து வாழ வேண்டிய இதயங்கள் இடையே இடைவெளி! இதை எப்படி இதைவிட எளிமையாக இனிமையாகக் கூறிவிடமுடியும்? அன்பின் சுவாசம் தவழ வேண்டிய இல்லற வாழ்வில் அகண்ட பிரிவு மனரீதியாக அமைந்துவிடும்போது, முதல்வரிக்கு ஏற்றாற்போல் இரண்டாம் வரி, இரண்டு கண்கள் இரண்டு காட்சி ...

Read More »

கிருஷ்ணா முகுந்தா முராரி …

— கவிஞர் காவிரிமைந்தன். கிருஷ்ணா முகுந்தா முராரி … திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும் இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது. குறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர் மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில் 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் அவர்களும், இப்பாடலுக்கு நம் நாட்டின் தொன்மை மாறாத இசையமைப்பு தந்த மேதை ஜி.ராமனாதன் அவர்களும், இணைந்து பாடலைப் ...

Read More »

கடவுள் தந்த இரு மலர்கள் …

— கவிஞர் காவிரிமைந்தன். கடவுள் தந்த இருமலர்கள் … கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டு! கதையின் கருவை உள்வாங்கி கவிதையாக மொழிவதில் கைதேர்ந்த கவிஞர்கள் சிலரே! இதோ இருமலர்கள் … ஒன்று பாவை கூந்தலிலே… ஒன்று பாதை ஓரத்திலே… நாயகனின் கைப்பிடித்த நாயகியையும் கைவிடப்பட்ட நாயகியையும் குறிக்கும் சொற்களாக! பத்மினி, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன் மூவரின் இடையே முகிழ்த்த பாடலை, கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே என்று பாத்திரம் ...

Read More »

பாடும்போது நான் தென்றல்காற்று …

–கவிஞர் காவிரிமைந்தன். பாடும்போது நான் தென்றல்காற்று … ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது! ...

Read More »

சரவணப் பொய்கையில் நீராடி …

— கவிஞர் காவிரிமைந்தன். சரவணப் பொய்கையில் நீராடி … இயற்கையெழில் கொஞ்சம் இதமான காலை வேளை! இதயத்தில் வந்துமோதும் இனிமையான பாடல்! சரவணப் பொய்கையில் நீராடி… பி.சுசீலாவின் குரலில் விளைந்த அற்புத நாதம்! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து தந்த இன்னிசை வேதம்! ஆம், இது சத்தியம்!! திருமால் மருகன் – செந்தில் குமரன் – கந்தன் – முருகன் என்னும் கடவுளை எண்ணி வணங்கி எழுகின்ற பாடலிது! குளிர்த்தென்றல் தாலாட்டும் குதூகலம் பரவும் வண்ணம் சந்திரகாந்தா என்னும் நடிகையின் திருமுகம் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ...

Read More »

ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி…

–கவிஞர் காவிரிமைந்தன். வா… வாத்தியாரே… வூட்டாண்டே … நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்… ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு… மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் நகைச்சுவை நடிகையாகத் தொடக்கம் தந்த ஆச்சி மனோரமா உலக வரலாற்றில் எவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளார். கதாநாயகியாக ஜொலித்திருந்தாலும் கூட அவரால் இந்த சரித்திரத்தைப் படைத்திருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் பெண் சிவாஜி என்கிற அளவு நடிப்பில் தனது பரிமாணங்களைத் தந்து மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள், சம்சாரம் அது ...

Read More »

பூவண்ணம் போல நெஞ்சம் …

— கவிஞர் காவிரிமைந்தன். பூவண்ணம் போல நெஞ்சம் … அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில் பிரதாப்போத்தன் – ஷோபா நடிப்பில், ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய பாடலாய், பூவண்ணம் போல நெஞ்சம்… இளம்காதலர்களின் இனிய உரையாடல்கள் தொடர்ந்தவண்ணமிருக்க, சின்னஞ்சிறு சிரிப்பும் சந்தோஷப்பூக்களும் சிதற, உதடுகளின் அசைவுகள் இன்றி பின்னணியில் மட்டும் குரல்சேர்ப்பு நடக்கிறது. மெளனங்களால் வரையப்பட்ட காதல் கவிதைக்குச் சுகமான மெட்டமைத்து, வார்த்தைப் பூக்களை வார்த்தளித்திருக்கிறார் கவிஞர் கங்கை அமரன். இனிமை தவழும் இளமை ததும்பும் ...

Read More »

அன்பு வந்தது என்னை ஆள வந்தது

— கவிஞர் காவிரிமைந்தன். சுடரும் சூறாவளியும் (1971) திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலிது. கவியரசு கண்ணதாசன் வரிகளுக்குச் செந்தூர இசையமைத்திருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! தாயினை இழந்த சேய்களைத் தழுவி நாயகன் பாடும் பாடலிது. நம்பிக்கை ஒளிதனை நாளைய தலைமுறைக்கு நயமாய் எடுத்துரைக்கும் வார்த்தைகள்! இனியதோர் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் எத்தனை முறை கேட்டிருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் என்றும் மயக்கம் தரும்! மெல்லிசை என்பது இதயத்தைத் தாலாட்ட வைக்க வல்லது என்பதற்கு இந்தப் பாடலும் சாட்சியாகும்! அன்பு என்பதுதான் எல்லாவற்றிற்கும் இங்கே ஆதாரமானது ...

Read More »

பல்லவன் பல்லவி பாடட்டுமே …

— கவிஞர் காவிரிமைந்தன். கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள். டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் ...

Read More »