Search Results for: நாகேஸ்வரி அண்ணாமலை

உலகம் பின்னோக்கிச் செல்கிறதா?

நாகேஸ்வரி அண்ணாமலை நாங்கள் 1966 செப்டம்பரில் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களில் பலர் பெரிய பதவிகளில் இல்லை. பலர் கட்டடத் துப்புரவுத் தொழிலாளிகளாகவும் வசதியான வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்களாகவும் இருந்தனர். பல்கலைக்கழகங்களில் பேராசியர்களாக/மாணவர்களாக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  அரசியலிலும் அப்படியே.  அமெரிக்காவை விட்டுச் சென்று 23 வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களின் நிலைமை மிகவும் மாறிப்போயிருந்தது. விமானநிலையத்திலேயே பலர் நல்ல பதவியில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கல்விக்கூடங்களிலும் பலர் வேலைபார்த்தனர். இந்தியாவில்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் பிரத்தியேக சலுகை எதுவும் கிடையாது. பல்கலைக்கழகங்களில் மட்டும் ...

Read More »

ஒரு ஜனாதிபதியின் சாக்கடை மனம்

நாகேஸ்வரி அண்ணாமலை 1947-இல் இந்திய உபகண்டத்திற்குச் சுதந்திரம் கொடுத்தபோது பிரிட்டன் அதை இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளாக – ஜின்னா போன்ற முஸ்லீம் தலைவர்களின் பிடிவாதத்தால் – பிரித்தது.  பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக நிலத் தொடர்பில்லாமல் இருந்தது.  அதிகமாக முஸ்லீம்கள் வாழும் பகுதி என்ற ஒரே காரணத்திற்காக கிழக்கு பாகிஸ்தான் என்னும் பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது.  மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு மொழி உட்பட எல்லா வகையிலும் சம உரிமைகள் கொடுக்காததால் கிழக்கு பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர்.  இதனால் ...

Read More »

ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம்

நாகேஸ்வரி அண்ணாமலை ஐக்கிய அரபு நாடுகள் அமீரகமும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  அதன்படி இரு நாடுகளுக்கிடையேயும் தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்படும்.  இதற்கு இஸ்ரேல் கொடுத்திருக்கும் ‘சலுகை’ வெஸ்ட் பேங்கில் இருக்கும் யூதக்குடியிருப்புகளை நேத்தன்யாஹு இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்த முடிவை இப்போதைக்கு நிறுத்திவைப்பது. இந்தச் செய்தியை ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிவித்தார்.  இது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவைப் பொறுத்தவரை ஒரு பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் ...

Read More »

அமெரிக்க மனைவியின் துக்கம் அனுசரிக்கும் அழகு

நாகேஸ்வரி அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னால் எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் என் கணவருக்குப் பரிச்சயமானவர். அமெரிக்கரான அவர் பீஸ்கோர் (peace corps) திட்டத்தில் இந்தியாவுக்கு வந்தபோது என் கணவரோடு பரிச்சயம் ஏற்பட்டது. பின் அவர் அமெரிக்கா திரும்பிய பிறகும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அதன் பிறகு நாங்கள் அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்தோம்.  என் கணவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபோது அவரும் அங்கேயே முனைவர் பட்டதிற்குச் சேர்ந்தார்.  நாங்கள் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவர்கள் ...

Read More »

அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

நாகேஸ்வரி அண்ணாமலை ஜூலை 16, 2020 அன்று அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடித்துச் சோதித்துப் பார்த்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அன்று அதிகாலை ஒரு மணிக்கு அணுகுண்டுப் பரிசோதனையின் (இதை டிரினிட்டி (Trinity) என்று அழைத்தார்கள்) தலைவர் விஞ்ஞானி  ராபர்ட் ஓப்பென்ஹைமெர், ராணுவ அதிகாரி லெஃப்டினென்ட் ஜெனரல் லெஸ்லி க்ரோவெஸ்ஸை அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலுள்ள ஒரு பாலைவனத்தில்  – அணுகுண்டை வெடித்துப் பரிசோதிக்கப் போகும் இடத்தில் – சந்தித்து எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்தார். அவர்கள் இருவர் மட்டுமல்ல, நிறையப் ...

Read More »

நோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா?

நாகேஸ்வரி அண்ணாமலை கோவிட்-19 பரவிக்கொண்டிருந்ததால் அமெரிக்காவில் கடைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.  எல்லாவற்றையும் விட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன; சில திருமணங்களில் விருந்தினர் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது; சில திருமணங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஆனால் 1918-இல் ஸ்பேனிஷ் ஃப்ளூ என்னும் வைரஸால் பரப்பப்படும் வியாதி உலகம் முழுவதும் பரவியபோது ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் அங்கு இறந்தவர்களும் உயிரோடு இருந்தவர்களும் கலந்துகொண்டார்கள். எப்படித் தெரியுமா? அந்தத் திருமணம் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடத்திவைக்கப்பட்டது. கொடிய வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்தபோது அங்கு எப்படி ஒரு திருமணம் ...

Read More »

தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

நாகேஸ்வரி அண்ணாமலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது. அமெரிக்க அரசியல் ஊழல் இல்லாதது, அமெரிக்க அரசியல்வாதிகள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்ற எண்ணம் இருந்தது.  இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டதுபோல் தெரிகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல் அமெரிக்க ஜனாதிபதியாவதற்குச் சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது; உலக சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்; நல்ல புத்தி கூர்மையுள்ளவராக இருக்க வேண்டும்; ஆலோசகர்கள் இருந்தாலும் அவர்கள் கூறுவதைப் ...

Read More »

அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்

நாகேஸ்வரி அண்ணாமலை மே 25, அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவுநாள்.  இதை ஆங்கிலத்தில் Memorial Day என்று அழைப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டும் வரும் ஐந்து தேசிய விடுமுறைகளில் இதுவும் ஒன்று.  மே மாதத்தின் கடைசித் திங்கள் கிழமையை இந்த நினைவுநாளாகக் குறித்திருக்கிறார்கள். அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்டவர்களை நினைவுகூரும் நாள். அமெரிக்கா புரிந்த பல போர்கள் தேவையில்லாதவை. அமெரிக்கா தன்னுடைய பண வலிமையையும் ராணுவ பலத்தையும் காட்டுவதற்காகப் புரிந்த போர்கள் அவை. அதிலும் வியட்நாமில் புரிந்த போர் அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் புரிந்த ...

Read More »

அமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு

நாகேஸ்வரி அண்ணாமலை கோவிட்-19 உலகில் பரவ ஆரம்பித்ததிலிருந்து எல்லா நாடுகளையும் – ஏழை நாடுகள், பணக்கார நாடுகள், கம்யூனிஸ்ட் நாடுகள், ஜனநாயக நாடுகள் – பல விதங்களில் பாதித்திருக்கிறது. கொரோனா வைரஸ்தான் உண்மையான நடுநிலையாளர்; எவரையும் விட்டுவைக்கவில்லை. தன் பண பலத்தாலும் படை பலத்தாலும் எந்த நாட்டையும் பணியவைத்துவிடலாம் என்று மமதை கொண்டு நடக்கும் நாடான அமெரிக்காவைத்தான் இந்த வைரஸ் அதிகமாகப் பாதித்திருக்கிறது. நான்தான் எல்லாவற்றிலும் முதல் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா இதிலும் முதல் இடம் வகிக்கிறது. ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இதைப் பற்றி எந்தவிதக் ...

Read More »

அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

நாகேஸ்வரி அண்ணாமலை கோவிட்-19 வைரஸ் மனித இனத்தை முற்றுகையிட வந்தாலும் வந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவராசி அணுவிலும் பாதிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; இருந்தாலும் மனிதனை எத்தனை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் என்னும் இடத்தில் முதலில் தோன்றிய இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வூஹான் வைரஸ் என்று அழைக்கிறார்; சீனா வைரஸ் என்றும் கூறுகிறார். சீனாதான் இதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் கொடுத்திருக்கிறது என்கிறார்.  சீன அதிபதி ஷியோ இது ...

Read More »

இல்லாமையின் கொடிய முகம்

நாகேஸ்வரி அண்ணாமலை கொரொனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருந்து கொரொனா ஏற்படுத்தும் அபாயங்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் நாங்கள் இப்போது இருக்கிறோம். இப்போது மற்ற எல்லா நாடுகளையும்விட அமெரிக்காவில்தான் அதிகப் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; அதிகப் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இதற்கு ட்ரம்ப் சரியாக முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்பதுதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள். முதலில் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, பதட்டப்படாமல் இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது தான் முதலிலேயே ஆபத்து வருகிறது என்று சொன்னதாகக் கதையையே ...

Read More »

இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

நாகேஸ்வரி அண்ணாமலை இன்று அமெரிக்காவிலிருந்து மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன்.  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கொரோனோவைரஸின் நிலைமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அதன் பிறகு என்னுடைய அடுத்த புத்தகம் வியட்நாம் பற்றி என்றும் அங்கு எத்தனை உயிர்கள் – அமெரிக்கர்களும் வியட்நாமியர்களும் – அமெரிக்க ஜனாதிபதிகளின் ‘ஈகோ’வால் பலியாகின என்பதை அறிந்து என் மனம் என்ன பாடுபட்டது என்பது பற்றியும் அவரிடம் கூறினேன். அமெரிக்காவும் தாலிபானும் சமாதானம் பற்றி நடத்தும் பேச்சுவார்த்தை பற்றியும் கூறிவிட்டு ஆஃப்கானிஸ்தானில் என்றாவது அமைதி வருமா என்று ...

Read More »

அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது

நாகேஸ்வரி அண்ணாமலை மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள் முன்னணியில் இருக்கும், ஜனநாயகத்திற்கு ஒரு உதாரணமாக விளங்கிய அமெரிக்கா இப்போது ஜனநாயக்தை இப்படிச் சாகடித்துவிட்டதே என்பதை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.  சென்ற சில மாதங்களாக அமெரிக்காவில் நடந்துவந்த நிகழ்ச்சிகள் மனதில் கவலையைத் தோற்றுவித்தாலும் ‘என்ன இருந்தாலும் இது அமெரிக்கா, ஜனநாயகம் எளிதில் இங்கு தோற்றுவிடாது என்று நம்பிக்கொண்டிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொய்த்துவிட்ட பிறகு இது கனவா, நனவா என்ற எண்ணத்தில் மனது உழல்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ...

Read More »

அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு இப்போது ஒரு அக்கினிப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தேறுமா அல்லது இதுவரை அதற்கு இருந்துவந்த உலகிலேயே ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயரை இழந்துவிடுமா என்ற கேள்வி அமெரிக்கர்கள் பலர் மனதில் இப்போது இருக்கிறது. 2016-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அந்த முடிவு அமெரிக்க மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று பலர் ...

Read More »

உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

நாகேஸ்வரி அண்ணாமலை ஒரு வாரத்திற்கு முன்னால் இப்போதைய இந்திய அரசு மதத்தின் அடிப்படையில் குடிமக்களை வேறுபடுத்துகிறது என்ற கருத்தைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சொன்னேன். நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை; இது பொய்யான செய்தியைப் (fake news) பரப்புவது என்று வாசகர்கள் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.  உள்நோக்கத்திற்கு ஆவண ஆதாரம் தேட முடியாது. ஆவண ஆதாரத்தில் உள்நோக்கம் வெளிப்படாது.  செயல்களைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் உள்நோக்கம் வெளிப்படும்.  பா.ஜ.க. அரசின் செயல்களை – மௌனங்களையும்தான் – வைத்தே என் கருத்தைச் சொன்னேன்.  இந்தக் கருத்து என்னைப்போல் ...

Read More »