Tag: எம்.ஜி.ஆர்.

  • எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

    எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

    திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கி, அசைக்க முடியாத ஆளுமையாக, பெரும் புகழோடு திகழ்ந்தார். 1977ஆம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அவரே தமிழக முதலமைச்சர். 1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கியபோது, அதிமுகவைத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கிப் பேசினார். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – கட்டுரைப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிப்பு

    மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்ற தலைப்பில் தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியை அவரது பிறந்த நாளில் அறிவித்திருந்தோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வருகிறீர்கள்.

    MGR_midday_meal

    கையால் எழுதி ஸ்கேன் செய்தும் வெவ்வேறு எழுத்துருவிலும் சிற்சில கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருங்குறியில் தட்டி எழுதப்பெற்ற படைப்புகளை மட்டுமே போட்டிக்கு ஏற்க இயலும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

    சில கட்டுரைகள் மிக நீளமாகவும் அமைந்துள்ளன. கட்டுரைகள், 1000 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

    கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம்.

    எம்.ஜி.ஆர். அவர்களை அறியாதவர்களைக் காண்பது அரிதே. அவர், உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அனைவரும் அறிந்த, உணர்ந்த, மறக்க முடியாத மனிதர். அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அதை உங்கள் நடையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்தப் பக்கத்தில் காணுங்கள். http://www.vallamai.com/?p=53863

    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share