நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுக்கிறார் மணப்பெண். காரணம் என்ன? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா.
அவர்கள் புதுமணத் தம்பதிகள். ‘எனக்கு உடனே குழந்தை வேணும்’ எனக் கணவன் அவசரம் காட்ட, அந்தக் குடும்பத்தில் நடந்தது என்ன? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா.
விவாகரத்து பெற்ற பிறகும் மறக்க முடியாமல், மாறாத அன்புடன் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர், அந்தத் தம்பதியர். எப்படி நடந்தது இந்த அதிசயம்? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா.
கணவனை, காதலனை ‘டா’ போட்டு அழைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள். இப்படி அழைக்கலாமா? நிர்மலா ராகவன் அவர்களின் பதில் இங்கே.
மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு வலி, வருத்தம், கோபம், எரிச்சல் போன்ற கலவையான உணர்வுகள் எழுகின்றன. உயிரைப் பிளக்கும் இந்த வலியைத் தீர்க்கும் மருந்துகள், மருத்துவ முறைகள், பயிற்சிகள் என்னென்ன? இந்த நேரத்தில் அவர்களும் குடும்பத்தினரும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? இதோ, ஆலோசனை வழங்குகிறார் நிர்மலா ராகவன். அத்துடன், மகப்பேற்றுக்குப் பிறகு வயிறு பெருத்துவிடும் பெண்கள், வயிறு சுருங்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.