Tag: தமிழ்நாடு

  • அரசுப் பள்ளி மாணவர் சாதனையில் அரசு உரிமை கோரலாமா?

    அரசுப் பள்ளி மாணவர் சாதனையில் அரசு உரிமை கோரலாமா?

    அண்ணாகண்ணன்

    அரசுப் பள்ளி மாணவி, ஜப்பானிய மொழியில் பேசிவிட்டார். அரசுப் பள்ளி மாணவர், ஐஐடியில் சேர்ந்துவிட்டார். பழங்குடியின மாணவி, வழக்குரைஞர் ஆகிவிட்டார்… என்பன போன்ற செய்திகளில் ஓர் அடிப்படைச் சிக்கல் இருக்கிறது.

    ஏதோ இவர்கள் கீழ்நிலையில் இருப்பது போலவும் அதிலிருந்து ஏறி வந்து, மேல்நிலைக்கு வந்துவிட்டது போலவும் ஒரு தொனி இவற்றில் இருக்கிறது. அரசுப் பள்ளி என்றால் மதிப்புக் குறைந்தது போன்ற ஒரு கண்ணோட்டத்தை அரசினரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களை அறியாமலே வலுப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி, அரசுப் பள்ளி என அழுத்திச் சொல்வதன் மூலம், கழிவிரக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் யாரும் இவ்வாறு சொல்வதில்லை. தங்கள் பள்ளியின் பெயரை மட்டுமே சொல்கின்றனர். அதுவும், தன்னம்பிக்கையுடன், தலை நிமிர்ந்து சொல்கின்றனர்.

    அரசுப் பள்ளி மாணவர் எனச் சொல்வதால், மாணவருக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அந்த மாணவரின் உழைப்பில், ஆசிரியர்களும் அதிகாரிகளும் தமிழக அரசினரும் விளம்பரம் தேட முயல்கிறார்கள். மாணவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி சார்ந்த சேவைகள், மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்படுகின்றன. ஒரு வகையில் அது கடமை. அதை முறையாக, ஒழுங்காக, தரமாகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். சிறப்பாகப் படித்த மாணவர்களின் பெருமையில் அரசு உரிமை கோருகிறது என்றால், சரியாகப் படிக்காத மாணவர்களின் தரத்திற்கும் அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

    Share
  • தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    தமிழ்நாடு எனப் பெயர் வைத்ததன் மூலம் சோறு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அண்ணா பதில் அளித்துள்ளார். ஜாங்கிரி, ஜிலேபி போன்ற பலகாரங்கள் வட்ட வடிவத்தில் இல்லாவிட்டால் அவை இனிக்காதா என்ற கேள்விக்கும் இதில் பதில் உள்ளது. சுவையான உரை.

    (ஜூலை 18 (1967) – தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாட்டின் சுங்கச் சாவடிகள்

    தமிழ்நாட்டின் சுங்கச் சாவடிகள்

    தமிழ்நாட்டின் 27 சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல், 5 முதல் – 50 ரூபாய் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பாஸ்டேக் (FASTag) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நீண்ட வரிசைகளில் காத்திருப்பது முடிந்தது. சில நொடிகளில் கட்டணம் செலுத்தி, சுங்கச் சாவடியைக் கடக்க முடிகிறது. ஏற்கெனவே சாலைகளின் தரம் குறித்தும் நம் அலைவரிசையில் பதிவு செய்துள்ளோம். இப்போது இந்தத் தொகுப்பில் சுங்கச் சாவடிகளின் தரம், அமைப்பு, வடிவமைப்பு, அழகு, செயல் திறம் உள்ளிட்ட பலவற்றையும் நாம் கவனிக்கலாம். இதோ தமிழ்நாட்டின் சுங்கச் சாவடிகள் ஊடாக ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாடு நல்லா இருக்கு – உ.பி. தொழிலாளி மகிழ்ச்சி

    தமிழ்நாடு நல்லா இருக்கு – உ.பி. தொழிலாளி மகிழ்ச்சி

    தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளாக வசிக்கும் உத்தரப்பிரதேசத் தொழிலாளி மகேஷ்ராஜ், உ.பி.யை விட, இதர மாநிலங்களை விடத் தமிழ்நாடு நல்லா இருக்கு, இங்கு வேலை கிடைக்கிறது, நல்ல சம்பளம் கிடைக்கிறது என்கிறார். இவருடன் சென்னை தாம்பரத்தில் இன்று ஓர் உற்சாகமான உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share