Tag: திருமலைசோமு

  • ஞாபக சாரலினூடே

    திருமலைசோமு

    தேடி அலையும்
    இந்த வாழ்க்கையில்..
    ஒடித்திரிந்து பெற்றது பாதி

    மீதிக்கு ஏங்கி..
    தூக்கம் இழந்து
    தொலைந்து போன
    பழைய நாட்களை..
    எண்ணி எண்ணி

    ஞாபக சாரலினூடே நகர்கிறது

    முற்றுப்புள்ளியின்
    முகம் தேடி
    ஓய்ந்து கிடக்கும்..
    என் புதிய நாட்கள்.

    படத்துக்கு நன்றி

     http://www.mde-art.com/art-blog/abstract-drawing-of-a-face-determination/

    Share
  • மனக்கனவுகள்

     

    திருமலைசோமு

    செடியில்லை கொடியில்லை
    செங்காத்து பூமியில் வேர் விட்டு
    மொட்டு விடவும் இல்லை
    ஆயினும் ஏனோ..
     
    இமைக்கும் இடைவெளியிலும்
    நொடிக்கொரு பொழுதுமென 
    பூத்து நிற்கிறதென் மனக்கனவுகள்
     
    நிறைவேறும் என காத்திருந்த
    நிமிடங்களில் கூட 
    நீரோட்ட்த்தில் புதையும்
    காகித கப்பலாய் 
    காணாமல் போயிருக்கிறது..
     
    கனப் பொழுதில் கரைந்தே போனாலும்
    விடிகாலை வானில் 
    புன்னகைக்கும் புது சூரியனாய்…
    மீண்டும் மீண்டும் எழுகிறது
    என் மனக்கனவுகள்…
     
    கதவுகள் அடைத்து துரத்தவோ…
    கடிவாளம் போட்டு இழுக்கவோ
    முடியாத என் மனக்கனவுகளுக்கு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
     
    என் கனவுகளை 
    கொன்று தின்று கொக்கரித்தவர்களே..
    நினைவில் கொள்ளுங்கள்..
    காற்றும் கடவுளும் என்றும்
    ஒரு திசையில் நின்றதில்லை..!
     
    படத்துக்கு நன்றி

    http://abi-shameena.blogspot.in/2010/12/dream-in-islam.html

    Share