Tag Archives: திரை

’ஒத்த வீடு’ – திரைப்படச் செய்தி

விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ் குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’. இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம். எஸ். பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமான், பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா, சண்முகம், யோகி தேவராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ. தஷி இசையமைத்துள்ளார்.  ஸ்ரீ ரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கே. இத்ரீஸ், எம். சங்கர் இருவரும் இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர். ...

Read More »

’இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்’ – இயக்குநர் பி.வாசு

சென்னை,ஜூலை,30 இளையராஜா போல அருமையான மெலடி பாட்டை போட்டு தந்துள்ளார் என்று இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவாவுக்கு இயக்குனர் பி.வாசு புலிவேஷ‌ம் இசை வெளியீட்டு விழாவில் பார்ராட்டு தெரிவித்தார். பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.  ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு பாடல் சிடியை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா பெற்று கொண்டார். இசையமைப்பாளர் , ஸ்ரீ காந்த் தேவா, ...

Read More »

கிராமத்து காமெடி கிரிக்கெட் – ’போட்டா போட்டி’ – வெளியீடு

ஏ.வி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஃபிளிக்கர் ஸ்டுடியோஸ் யுவராஜ் வழங்கும் ’போட்டா போட்டி’ இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், ஹரிணியுடன் 30க்கும் மேற்பட்ட புது முகங்கள் நடித்துள்ள முழு நீள காமெடி கிரிக்கெட் படத்தில் மயில்சாமியும் இணைந்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, அருள்தேவ் இசையில் யுவராஜ் மதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஆகஸ்டு 5ம் தேதி திரைக்கு வருகிறது.  இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. வி. முரளிராமன்.  மக்கள் தொடர்பு : எஸ். செல்வரகு. உலகக் கோப்பை மற்றும் IPL ...

Read More »

என்னை வைத்து பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா! – நடிகை நமீதா – செய்திகள்

”நடிகை சோனா என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில்இறங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு எனது அங்கீகாரத்தை வேறு அவர்எதிர்ப்பார்க்கிறார். இது கடைந்தெடுத்த முட்டாள்தனம்” என்று நடிகை நமீதாகூறியுள்ளார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர்,போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் சம்பந்தப்படுத்தி காட்சிகளை வைத்துள்ளனர். என்னைப் போன்ற பிரபல நடிகைகளுக்கு நேரும் வழக்கமான சங்கடம் இது என்பதை நான் புரிந்து கொண்டு இத்தனை நாள் அமைதி ...

Read More »

வழி விடு கண்ணே! வழி விடு – இசை வெளியீட்டுவிழா

வழி விடு கண்ணே! வழி விடு திரைப்படத்தின் கதாநாயகன் தமிழ், கதாநாயகி மதுஸ்ரீ. அலி கான் இயக்கும் இத்திரைப்படத்தின் இசையமைப்பு ஆதிஷ் உத்திரன், தயாரிப்பு கௌரி சங்கர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, 24 ஜூலை 11 (ஞாயிறு) அன்று மவுண்ட் ரோட்டில் உள்ள ஃபிலிம் சேம்பரில் நடைபெற்றது. திரைபடத்தின் பாடல்களை ஃபிலிம் சேம்பர் பொக்கிஷதாரர் கே. எஸ். ஸ்ரீனிவாசன் வெளியிட ஜெய் ஆகாஷ் பெற்றுக்கொண்டார்.  

Read More »

அஜய் தேவ்கனின் “சிங்கம்” – ஹிந்தியில்

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “சிங்கம்” திரைப்படம், இப்பொழுது ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டு அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளிவர உள்ளது.  ஜூலை 22, 2011 அன்று இத்திரைப்படம் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் வெளியாகவுள்ளது. ஹிந்தி “சிங்கம்” திரைப்படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  யூனுஸ் சேஜ்வால் திரைக்கதை எழுதியுள்ளார். சாஜித் – ஃபராத் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.  தேசிய விருது பெற்ற மராட்டிய இசையமைப்பாளர்கள் அஜய் மற்றும் அதுல் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.      

Read More »

பாலை பட பாடல் வெளியீட்டு விழா – நடிகை ஷம்மு பேச்சு

செம்மை வெளியீட்டகம் தயாரிப்பில் உருவாகி வரும் பாலை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. டெலிபோன் பவன் சாலையில் உள்ள யாளி ரெசிடென்சியில் நடந்த விழாவில் கலந்து கொள்ள ஈரோடு, மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அனைவரையும் தயாரிப்பாளர் நாகை ரவி, இயக்குனர் ம.செந்தமிழன் ஆகியோர் வரவேற்றார்கள். படத்தின் நாயகி ஷம்மு இந்த விழாவில் பேசியதாவது: “பொதுவா ஒரு கதையை கேட்டவுடனே இந்த படத்தை ஏன் பண்ணக் கூடாது, ஏன் பண்ணணும் என்று இரண்டு ...

Read More »

விலங்குகளின் விநோத ராஜ்யம் – ZOO KEEPER – ஹாலிவுட் திரைப்படம்

தமிழ்த் திரையுலகில், மிருகங்கள் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன.  அந்தக் கால தேவர் படங்கள் தொடங்கி, இந்த கால இராமநாரயணன் படங்கள் வரை இதற்கு உதாரணமாக பல படங்களைக் கூறலாம்.  ‘அன்னை ஓர் ஆலயம்’ – யானை, ‘ஆட்டுக்கார அலமேலு’ – ஆடு,  ‘துர்கா’ – குரங்கு போன்றவை பரந்த அளவுக்கு பிரபலமானவை. விலங்குகளை கதாபாத்திரமாக்கி உருவாகும் படங்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டாலும் போகப்போக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விடும். அந்த வகையில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் “Zoo ...

Read More »

‘தி ஸ்மர்ப்ஸ் 3D’

பிரம்மாண்டமான மாயா ஜாலம் இணைந்த ‘தி ஸ்மர்ப்ஸ் 3D’ (The Smurfs 3D) நம் நாட்டுத் தலைவர்களின் பெயர்கள் தெரிகிறதோ இல்லையோ டாம் &ஜெர்ரி, பப்பாய், ஸ்கூபீடு, டென்னிஸ், கிட், கேட், கிக் பட்டோஸ்கி போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் குழந்தைகளுக்கு அத்துப்படி.  இதைப் போலவே Studio Peyo உருவாக்கிய Smurfs கதாபாத்திரங்களும் மேலை நாடுகளில் பிரபலம். இந்த ஸ்மர்ப்ஸ் பாத்திரங்கள் சின்னத் திரை, விளையாட்டுக்களில் தனி ராஜ்யம் படைத்து கோலோச்சி வருகின்றன.  பெரிய திரை வடிவத்தில் ஸ்மர்ப்ஸ் பாத்திரங்களைக் கொண்டு வந்தால் ...

Read More »

வாகை சூட வா படத்தின் பாடல் வெளியீட்டு விழா

இதில் நாயகன் – நாயகியாக விமல், இனியா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் இப்படத்தை முருகானந்தம் தயாரித்துள்ளார். சத்யம் சினிமாஸில் இந்த படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது.  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். ”’வாகை சூட வா”’ படத்தின் இசைக்குறுந்தகடை இயக்குனர் பாரதிராஜா வெளியிட, இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

Read More »

அரவான்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனாகவி, கரிகாலன் நடிக்க, ’வெயில்’, ’அங்காடித்தெரு’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் G. வசந்தபாலன் இயக்கும் திரைப்படம் ‘அரவான்’.  பின்னணிப் பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். அரவான் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை.  அந்த காலகட்டத்தினை நிஜமான காட்சிகளாய் கண் முன் நிறுத்த வேண்டி, படப்பிடிப்புக்கு இடம் தேடிய குழு பாண்டியர்கள் ஆண்ட, போர்க்காலங்களில் ஒளிந்து வாழ்ந்த ஏராளமான மலைப்பகுதிகளைத் தேடினர்.  மூன்று மாத காலத் தேடலுக்குப் பின் இறுதியாக, ...

Read More »

ஜெர்மனியில் ‘180’

25 ஜுன் 2011 அன்று வெளிவந்து, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘180’.  இதன் இயக்குனர் ஜெயேந்திரா.  இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.  இதில் சித்தார்த், பிரியா ஆனந்த், நித்தியா மேனன், மௌலி, கீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு பால சுப்ரமனியம், இசை ஷரத். இத்திரைப்படம் ஜெர்மனி நாட்டின், ஸ்டட்கார்ட் (Stuttgart) என்னும் நகரில் நடைபெறும் இந்தியத் திரைபபட விழாவில் திரையிடப்படுகிறது.  இவ்விழா ஜூலை 20 முதல் 24, 2011 வரை நடைபெறும்.  ’இயக்குனர் ...

Read More »

ரா.ரா(ராயபுரம்.ராயப்பேட்டை) திரைப்பட பாடல் வெளியீடு

நடிகர் உதயா நடிக்கும் ரா.ரா(ராயபுரம்.ராயப்பேட்டை) என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு 27 ஜூன் 2011 அன்று எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 28 ஜூன் 2011 அன்று தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள ஹோட்டல் ஸ்டார் சிட்டி ல் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில படங்கள் இங்கே :

Read More »

பட்டுக்கோட்டையாரின் வாரிசு பாடல் எழுதும் – ‘ஒத்தவீடு’

‘விஷ்ஷிங் வெல்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஒத்தவீடு’. இந்தப் படத்தில் புதுமுகம் திலீப்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சுப்புராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலு மலர்வண்ணன். ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்ய, வீ. தஷி இசையமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஆறு பாடல்களில், ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் எழுதுகிறார். மற்றப் பாடல்களை கவிஞர் ராஜராஜன், தானு ...

Read More »

உயர்திரு 420 – திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா – செய்திகள்

22 ஜூன், 2011 அன்று உயர்திரு 420 திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.  இதனை படத்தின் இசையமைப்பாளர் திரு. மணி ஷர்மா வெளியிட திரு. யுவன்சங்கர்ராஜா பெற்றுக்கொண்டார்.  இப்படத்தின் டிரைலர் ஐ திரு, அபிராமி இராமநாதன் வெளியிட கவிஞர் வாலி மற்றும் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சில காட்சிகள் இங்கே :

Read More »