Tag: மயில்

  • சாதம் உண்ணும் மயில்

    சாதம் உண்ணும் மயில்

    நாம் காக்கைக்குச் சாதம் வைப்பது போல், கோவையில் வசிக்கும் எங்கள் குடும்ப நண்பர் காஞ்சனா, மயிலுக்குச் சாதம் வைக்கிறார். தட்டில் வைத்த சாதத்தை மயில்கள் கொத்திக் கொத்தி உண்ணும் அழகிய காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • பச்சைக் கழுத்து மயில்

    பச்சைக் கழுத்து மயில்

    மயில் பச்சை என ஒரு நிறமே உண்டு. கோவையில் தற்செயலாக இந்தப் பச்சைக் கழுத்து மயிலைக் கண்டேன். எனது நல்வாய்ப்பு, அதன் பல்வேறு உணர்வுகளை, அசைவுகளை நெருங்கி நின்று படமெடுக்க முடிந்தது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தென்னை மரத்தில் மயில்கள்

    தென்னை மரத்தில் மயில்கள்

    கோவையில் குயில் கண்டேன், கிளி கண்டேன், மைனாவும் புறாவும் வால்காக்கையும் பொன்முதுகு மரங்கொத்தியும் கண்டேன். மயிலை இன்னும் காணவில்லையே என நினைத்தேன். அடுத்த நிமிடம், மயிலின் அகவலிசை கேட்டது. அந்தக் குரலைப் பின்தொடர்ந்து சென்றேன். தென்னை மரத்தில் ஒன்றுக்கு மூன்றாய் மயில்கள் கண்டேன். ஆஹா, அந்த அழகிய காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மயிலொன்று கண்டேன்

    மயிலொன்று கண்டேன்

    குரங்குகளைக் காண்பதற்கு முன்னதாக முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கதவைத் தட்டும் மயில்

    கதவைத் தட்டும் மயில்

    திருப்பூரில் வாழும் இரா.சுகுணாதேவி (வழக்குரைஞர்), தன் வீட்டைச் சுற்றி வசிக்கும் மயில்களுக்கும் பறவைகளுக்கும் உணவளித்துக் காத்து வருகிறார். காலையில் அவர் வீட்டுக் கதவை யாரோ தொடர்ந்து தட்டவே, யார் என்று பார்த்தால், இந்த மயிலார். வாசலில் வைத்த அரிசியும் நீரும் தீர்ந்துவிட்டதாம். கதவைத் தட்டிக் கேட்கிறார். இப்படியில்ல, உரிமையாக் கேட்கணும்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share