முனைவர் கு.வளர்மதி,
உதவிப் பேராசிரியர்,
இளங்கலைத் தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
இறையருளால் பிறப்பு
உயரிய மனிதப்பிறப்பு
உன்னதம் புரியாநிலை!
எண்ணங்களின் குவியலில்
சிற்றின்ப ஆசையில் – நித்தம்
வாழ்க்கைக்கடலில் தத்தளிப்பு!
மனம்போன பாதையில்…
அலைபேசியின் உரையாடலில்
தலைகீழான வாழ்க்கை!
ஏடெடுத்துப் படித்தவனும்
ஏறமுடியா சிற்றின்பவெள்ளம்!
எப்படியும் வாழலாமெனில்,
பகுத்தறிவு தேவைதானா?
சிற்றின்பமே பெரிதெனில்…
விலங்குநிலையே போதுமே!
அளவில்லா ஆசையினை
அனுதினமும் சுமக்காதே!
மனதை ஒருமுகப்படுத்து…
பேரின்பநிலைக்குச் செல்!
மனிதப்பிறவியின் மகத்துவம்
இறையடியில் தஞ்சமே!
சிற்றின்பத்தைத் தகர்த்துவிடு…
பேரின்பத்தை நாடிவிடு!
வாழ்க்கை வசப்படும்;
உலகம் உனதாகும்!
