Tag: வி.கிருத்திகா

  • விழித்தெழுந்த இந்தியா

    விழித்தெழுந்த இந்தியா

    அண்ணாகண்ணன்

    தகதகக்கும் அகமுகத்து நகைநமக்குச் சித்திரம்
    சகலருக்கும் சகலமென்ற இதுநமக்குத் தத்துவம்
    நிகரிலாத நெறியறங்கள் நிதம்நமக்குச் சத்தியம்
    பகைவருக்கும் அருளுகின்ற அருள்நமக்கு நித்தியம்

    மனிதனென்ற பெருமிதத்தை வழியவிட்ட நம்முகம்
    கனிவுமிக்க மனம்பனிக்கப் பளபளக்கும் நம்விழி
    இனிமைமிக்க மதுரகாதல் இசைததும்பும் நம்குரல்
    இனிதுவக்கும் பெரிதுவக்கும் இளகிநிற்கும் நம்முயிர்

    யுகயுகத்துக் கருச்சுமந்து விழித்தெழுந்த இந்தியா
    ஜெகஜெகத்தை வழிநடத்தும் தேசம்இந்த இந்தியா
    வகுவகுத்து இடரனைத்தும் சிதறடிக்கும் இந்தியா
    பகுபகுத்து முனைகுவித்துப் பணிமுடிக்கும் இந்தியா

    செயல்சிறந்து இயல்சிறந்து பெயல்சிறந்து வாழ்கவே
    பயில்சிறந்து எயில்சிறந்து ஒயில்சிறந்து வாழ்கவே
    பயிர்சிறந்து உயிர்சிறந்து உயர்சிறந்து வாழ்கவே
    நயம்சிறந்து லயம்சிறந்து சுயம்சிறந்து வாழ்கவே

    அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ஓவியம் – வி.கிருத்திகா

    Share
  • உங்கள் வயிறு என்ன இடுகாடா? – வி.கிருத்திகா பேச்சு

    உங்கள் வயிறு என்ன இடுகாடா? – வி.கிருத்திகா பேச்சு

    திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகா, ‘அருட்திரு வள்ளலாரின் புலால் உண்ணாமையும் ஜீவகாருண்யமும்’ என்ற தலைப்பில் உரை ஆற்றியிருக்கிறார். புலால் உண்ணாமையின் பயன்களை விவரித்த அவர், மனிதர்கள் இறந்த பின் மண்ணில் புதைக்கிறோம். புலால் உண்போர், ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களைக் கொன்று தங்கள் வயிற்றையே அவற்றுக்கு இடுகாடாக மாற்றிவிடுகிறார்கள் எனப் பேசியிருக்கிறார். அவரது உரையை இங்கே கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொன்று நிகழ்ந்தது | பாரதியார் | கிருஷ்ணகுமார்

    தொன்று நிகழ்ந்தது | பாரதியார் | கிருஷ்ணகுமார்

    பாடல் – தொன்று நிகழ்ந்தது
    இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    பாடியவர் – கிருஷ்ணகுமார்
    ஓவியங்கள் – வி.கிருத்திகா

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share