காணொலிகள்சிறுவர் சிறுகதைபவள சங்கரி

The Ugly Duckling – அசிங்கமான வாத்து!

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா..

இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது..

கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன.

ud_mean
கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” என்று அவை கிரீச்சிட்டன. அந்தப் பெரிய முட்டை மட்டும் இன்னும் பொறியவில்லை.

ஒரு பாட்டி வாத்து, “நிச்சயமாக அது ஒரு வான்கோழியாகத்தான் இருக்கும்” என்று உறுதியாகச் சொன்னது. “வான்கோழிகளால் நீந்த முடியாது – அதற்காக கவலைப்படாதே”. ஆனால் அந்த அம்மா வாத்து கூட்டைவிட்டு வெளிவரவேயில்லை. அங்கேயே காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது.

ud_cat
கடைசியாக அந்தப் பெரிய முட்டை படக்கென வெடித்துப் பொறிய ஆரம்பித்தது. ஒரு பெரிய சாம்பல் வண்ண வாத்துக்குஞ்சு வெளியே துள்ளிவந்தது. அம்மா வாத்து அதைப்பார்த்து, “ஓ என் செல்லமே! நீ மற்றவர்களைப்போல இல்லையே, ஒருவேளை நீ வான்கோழியாகக்கூட இருக்கலாம். உன்னால் நீந்த முடிகிறதா பார்க்கலாம்” என்றது.

அந்த அம்மா வாத்து எல்லா குட்டி வாத்துகளையும் ஏரிக்கு ஓட்டிக்கிட்டு போனது. தானும் தண்ணிக்குள்ள இறங்கியது. வாத்துக்குஞ்சுகளும் தண்ணீருக்குள் துள்ளிக்குதித்தது.

வாத்துக்குஞ்சுகள் வீரர்கள் போல தங்கள் தலையை வீசிக்கொண்டு பாதத்தினால் துடுப்புப்போட்டபடி நீந்தின. அந்தப்பெரிய சாம்பல் நிற வாத்து மட்டும் படகு போல மிதந்து சாம்ப் போல நீந்தியது. “எந்த வான்கோழியும் இப்படி நீந்த முடியாது!” என்றது அம்மா வாத்து. அந்த வாத்து தண்ணீருக்கு மேலேயே எம்பிக்குதிப்பதைக் கண்டது அம்மா வாத்து. அது தன்னுடைய பெரிய சாம்பல் நிற வாத்து என்றே நினைத்தது அது.

images (28)
அம்மா வாத்து, “என்னோடு வாருங்கள். உங்களை நம் இனத்திற்கு அறிமுகம் செய்கிறேன் “ என்றது. அந்த வாத்துக்குஞ்சுகள் வரிசையாக அந்த ஏரியில் நீந்திச் சென்றன. அந்தப் புதிய வாத்துக்குஞ்சுகளைச் சந்திக்க நிறைய வாத்துகள் வந்தன. ”ஐந்து அழகிய வாத்துக்குஞ்சுகள் உங்களோடு அணிசேர வந்திருக்கின்றன” என்றது அம்மா வாத்து.

”அந்த அவலட்சணமான வாத்து பற்றி சொல்லுங்க.. அது ஏன் நம்மைப்போல் இல்லை!”

”அதுவும் உங்களை மாதிரித்தானே நீந்துகிறது, குவாக் .. குவாக் என்று கத்துகிறது. அளவில் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது” என்றது அம்மா வாத்து.

அந்த நான்கு வாத்துக்குஞ்சுகளும் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டன. ஆனால் அந்த அவலட்சணமான பெரிய வாத்து மட்டும் வரவில்லை. அது மட்டும் உதைபட்டும், கொத்தப்பட்டும், தள்ளிவிடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்டது பாவம்..

“பாவம், அதை விட்டுவிடுங்கள்” என்றது அம்மா வாத்து. ஆனால் மற்றவைகள் அதை விடுவதாயில்லை. இதில் என்ன கொடுமை என்றால் அதனோட கூடப்பிறந்த தம்பி தங்கைகளே அதை அவலட்சணம் என்று கொத்தி விரட்டியடித்ததுதான்.

ud_snow
“யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. எனக்கு இங்கு வாழ தகுதியில்லை. நான் வெளியே போகிறேன். உலகில் எனக்கான இடத்தைத் தேடிப்போகிறேன்” என்றது அந்த அவலட்சணமான வாத்து.

அப்படியே செய்யவும் முனைந்தது அது, ஆனாலும் அவ்வளவு எளிதான காரியமாக அது இருக்கவில்லை. அந்த அசிங்கமான வாத்து ஆபத்தான பறவைகளையும் மோசமான நாய்களையும் சந்தித்தது. ஒரு கோழி மற்றும் ஒரு பூனையுடன் சேர்ந்து குடியிருந்துப்பார்த்தது. எதுவும் ஒத்துவரவில்லை அதற்கு. திரும்ப அங்கிருந்தும் புறப்பட்டுவிட்டது.
இலையுதிர்காலம் வந்தது. ஒரு நாள் அந்த அசிங்கமான வாத்துஅழகான ஒரு வெண்மையான பறவை மந்தையைக் கண்டது. அவை வானத்தினூடே சுழன்றும், தாக்குதல் நடத்திக்கொண்டும் சென்றுகொண்டிருந்தன. அந்த அசிங்கமான வாத்து இந்தப் பறவைகளை இதற்குமுன் பார்த்ததே இல்லை. அவற்றை மிகவும் பிடித்துப்போயிற்று அதற்கு. அந்தப் பறவைகள் தன்னோடே தங்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டது அது.

… ஆனால் அவை குளிருக்காக தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்துவிட்டன. அந்த தெய்வீகமானப் பறவைகள் அந்த வாத்தை விட்டுவிட்டு தங்கள் பெரிய சிறகுகளை விரித்தபடி வானில் பறந்துவிட்டன.

பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஏரிகளும் சதுப்பு நிலங்களும் உறைந்துபோயின. அந்த அசிங்கமான வாத்திற்கு அது மிகவும் சிரமமான நேரமாகிவிட்டது. மெல்ல மெல்ல பனி குறைந்து வெதுவெதுப்பான நேரமும் வந்தது. அந்த அசிங்கமான வாத்து வசந்தகால சூரிய ஒளியில் நெட்டி முறித்துக்கொண்டது. தன்னுடைய உறுதியான சிறகுகளை நன்கு விரித்துக்கொண்டது. விரைவிலேயே அது பறக்கவும் ஆரம்பித்துவிட்டது.
அந்த அசிங்கமான வாத்து பூஞ்சோலைக்குள் பறந்து சென்றது. ஒரு ஏரியில் போய் இறங்கியது. ஏற்கனவே அங்கு மூன்று அழகிய பறவைகள் நீந்திக்கொண்டிருந்தன. அந்த அசிங்கமான வாத்து தன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டது. எப்படியும் அந்த மூன்று பறவைகளும் தன்னைக்கேலி செய்யப்போகிறது என்று காத்துக்கொண்டிருந்தது.
அந்த தோட்டத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள், “அதோ அங்கு பாருங்கள். ஒரு புதிய அன்னப்பறவை வந்திருக்கிறது. இதுதான் எல்லாவற்றையும் விட மிக அழகான அன்னம் இல்லையா” என்றனர்.
அந்த அசிங்கமான வாத்து அந்தக் குழந்தைகள் சொன்னதைக்கேட்டு தன்னைத்தானே அந்த தண்ணீரில் பார்த்துக்கொண்டது. என்ன ஆச்சரியம். அங்கு அழகானதொரு வெள்ளைப் பறவையைப் பார்த்தது அது… ஓ அது ஒரு அன்னப்பறவை!

மற்ற அன்னங்கள் அதை அன்புடன் வரவேற்றன. அவை “நீதான் எல்லோரையும் விட மிக அழகான அன்னம்” என்றும் கூறின. அந்த அசிங்கமான வாத்திற்கு வெட்கம் வந்துவிட்டது. அது, “நான் எல்லோரையும் விட அழகான அன்னம் அல்லா.. நான் தான் எல்லோரையும்விட மிகவும் மகிழ்ச்சியான அன்னம்” என்றது உற்சாகமாக!

இதிலிருந்து என்ன தெரிகிறது செல்லங்களா… யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே… ஆமாதானே நாம இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நிம்மதி அல்லவா?

Print Friendly, PDF & Email

Comment here