அசைவ வகைகள்உமா சண்முகம்சமையல்

தந்தூரி சிக்கன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

சிக்கன் பிரெஸ்ட்-8
புளிப்புத் தயிர்- 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள்-1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தூள்-1 டீஸ்பூன்
மஞ்சள் கலர்-1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1. சிக்கன் துண்டுகளை நன்றாக அலசி ஒரு துணியால் ஈரத்தைத் துடைக்கவும்.

2.தயிரைக் கடைந்து அதில் எலுமிச்சைச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் கலர் பவுடர், உப்பு முதலியவை சேர்த்துக் கலக்கவும்.

3.சிக்கன் துண்டுகளைச் சிறிதளவு கீறி விட்டுத் தயிர்க் கலவையில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

4.சிறிதளவு எண்ணெய் தடவித் தந்தூர் ஓவனில் 7 முதல் 8 நிமிடம் வரைச் சிக்கனைக் கிரில் செய்யவும்.

5.அவ்வப்போது சுற்றும் போது மசாலா இல்லாத இடங்களில் தடவி விடவும்.

6.பொன்னிறமானவுடன் கிரில்லரில் இருந்து எடுத்து வெங்காயத்துடனும் எலுமிச்சையுடனும் பரிமாறவும்.

Print Friendly, PDF & Email

Comment here