அசைவ வகைகள்உமா சண்முகம்சமையல்

தந்தூரி இறால்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பெரிய அளவிலான இறால்-12
அரைத்த தக்காளி விழுது-1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
வினிகர்-1 டேபிள் ஸ்பூன்
முட்டை-1
வோர்ஸ்டெர்ஷைர்(worcestershire)Sauce- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.இறாலை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யவும். ஒரு துணியில் ஈரம் போகத் துடைத்துக் காய விடவும்.

2.ஒரு பவுலில் அரைத்த தக்காளி விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, வோர்ஸ்டெர்ஷைர் சாஸ், வினிகர், முட்டை, உப்பு முதலியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் இறாலைச் சேர்த்து ஊற வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தந்தூர் ஓவனில் 5முதல் 6 நிமிடம் வரை கிரில் செய்யவும். அவ்வப்போது திருப்பி விடவும்.சூடாக
வெங்காயத்துடனும் லெட்டுஸ் இலையுடனும் பரிமாறவும்.

Print Friendly, PDF & Email

Comment here