உமா சண்முகம்சமையல்சிற்றுண்டி வகைகள்

வேக வைத்த நூடுல்ஸ்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

தக்காளி நூடுல்ஸ்-1 பாக்கெட்

முட்டை-3

துருவிய சீஸ்-3 டேபிள் ஸ்பூன்

காக்டெய்ல் சாசேஜெஸ்-8

பால்-1 கப்

சோளமாவு-2 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள், உப்பு-தேவையான அளவு

வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

நூடுல்ஸை வேக வைத்து தண்ணீரை வடி கட்டிக் கொள்ளவும்.வெண்ணெயைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். ஒரு சாஸ்பேனில் வெண்ணெயைப் போட்டு சோள மாவை வறுக்கவும்.கலர் மாறி வரும் பொழுது பாலைச் சேர்க்கவும். கட்டி விழாதவாறு பாலைக் கலக்கி விடவும். ஒரு கெட்டியான சாஸ் போல் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். முட்டையை அடித்து சாஸுடன் சேர்த்து நூடுல்ஸையும், சாசேஜுகளையும் சேர்க்கவும்.

துருவிய சீஸையும் அதன் மேல் சேர்க்கவும்.

இக் கலவையைச் சூடாக்கப்பட்ட தந்தூரி ஓவனில் 10 முதல் 15 நிமிடம் வரை வேக வைக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Print Friendly, PDF & Email

Comment here