அசைவ வகைகள்உமா சண்முகம்சமையல்

ஃபிஷ் டிக்கா

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள்-3 கப்
இஞ்சி பூண்டு விழுது-3 டேபிள் ஸ்பூன்
தந்தூரி மசாலாப் பவுடர்-3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு- 3 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சுக் கலர்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

மாரினேட் செய்வதற்கு

மைதா-4 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 டேபிள் ஸ்பூன்
சிறிதளவு உப்பு

இவற்றை ஒரு பாலிதீன் பையில் போட்டு மீன் துண்டுகளையும் போட்டுப் பிரட்டித் தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பவுலில் இஞ்சி பூண்டு விழுது, தந்தூரி மசாலாப் பவுடர், ஆரஞ்சுக் கலர், எலுமிச்சைச் சாறு, எண்ணெய் முதலியவற்றைக் கலக்கி மீன் துண்டங்களைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

சிறிதளவு எண்ணெய் தடவி 4 முதல் 5 நிமிடம் வரை கிரில் செய்யவும்.

சூடாகச் சட்னியுடனும் நறுக்கிய வெங்காயத்துடனும் பரிமாறவும்.

Print Friendly, PDF & Email

Comment here