அசைவ வகைகள்உமா சண்முகம்கறி வகைகள்சமையல்

லிவர் டிக்கா

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

ஈரல்-1/2 கிலோ
கெட்டித் தயிர்-1 கப்
மிளகாய்த்தூள்-2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது-2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பவுடர்-1 டேபிள் ஸ்பூன்
புதினா விழுது-2 டேபிள் ஸ்பூன்
தேவையான உப்பு
தேவையான எண்ணெய்

செய்முறை

ஈரலை நன்றாகச் சுத்தம் செய்து உலர வைக்கவும். பின்பு சிறிய துண்டுகளாக வெட்டி எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து ஊற வைக்கவும்.

ஒரு பவுலில் தயிரைக் கடைந்து அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாப் பவுடர், முந்திரி விழுது, புதினா விழுது முதலியவற்றைச் சேர்த்து உப்பையும் கலந்து ஊற வைத்த ஈரலைச் சேர்க்கவும்.

ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தந்தூரைச் சூடுபடுத்தி ஈரலை 5 முதல் 6 நிமிடம் வரை கிரில் செய்யவும்.

சூடாக வெங்காயத்துடனும் எலுமிச்சையுடனும் பரிமாறவும்.

Print Friendly, PDF & Email

Comment here