உமா சண்முகம்ஐஸ்க்ரீம் வகைகள்சமையல்

பைனாப்பிள் ஐஸ்கிரீம்

உமா சண்முகம்

பைனாப்பிளில் சிட்ரிக் அமிலம் அபரிதமாக உள்ளது. பொதுவாகப் பைனாப்பிளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஐஸ்கிரீம் கலவையில் சேர்ப்பது வழக்கம். இந்தத் துண்டுகளைப் பச்சையாக அப்படியே பால் பவுடரில் கலந்தால் ஐஸ்கிரீம் கசந்து விடும். அதனால் பைனாப்பிள் ஸ்லைஸ்களைச் சிறிதளவு தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு மிருதுவாக்கி, பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஐஸ்கிரீம் கலவையில் சேர்க்க வேண்டும். இது முடியாதவர்கள் கடைகளில் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பைனாப்பிள் துண்டங்களைப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

பைனாப்பிள்-4 ஸ்லைஸ்
பால் பவுடர் – 1 கப்
தண்ணீர் -2 கப்
சர்க்கரை -1 கப்
ப்ரெஷ் க்ரீம் -1 கப்
ஜி.எம்.எஸ் -1/2 தேக்கரண்டி
ஸ்டெபிலைசர் -1 தேக்கரண்டி
பைனாப்பிள் எசென்ஸ் -1 தேக்கரண்டி
மஞ்சள் கலர் – சிட்டிகை அளவு

செய்முறை:

வேக வைத்த பைனாப்பிள் ஸ்லைஸ்களை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பால் பவுடருடன் தண்ணீர் கலந்து, பிறகு கிரீம், எசன்ஸ், பைனாப்பிள் துண்டுகள், சர்க்கரை, கலர் எல்லாம் சேர்த்து கடைசியாக ஜி.எம்.எஸ் -ஸ்டெபிலைசர் கலவையைச் சேர்த்து விட ஐஸ்கிரீம் கலவை தயார்.

இதை ஃப்ரீசரில் செட் செய்து இறுகியதும் சுவைத்துச் சாப்பிடலாம்.

Print Friendly, PDF & Email

Comment here