உமா சண்முகம்ஐஸ்க்ரீம் வகைகள்சமையல்

பிஸ்தா ஐஸ்கிரீம்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பால் பவுடர் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ப்ரஷ் க்ரீம் -1கப்
ஜி.எம்.எஸ் -1/2 தேக்கரண்டி
பச்சைக்கலர் – சிறு துளிகள்
பிஸ்தா எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி
பிஸ்தா பருப்பு – 100 கிராம் (இதை மேல் தோல் எடுத்துக் கர கர வென்று பொடித்துக் கொள்ளவும்)

செய்முறை

பால் பவுடருடன் தண்ணீர் கலந்து கொள்ளவும். அத்துடன் சர்க்கரை, எசென்ஸ், க்ரீம், பொடித்த பிஸ்தாப்பருப்பு, பச்சைக் கலர் எல்லாவற்றையும் கலந்து, கடைசியில் ஜி.எம்.எஸ்-ஸ்டெபிலைசர் கலவையைச் சேர்த்து செட் செய்து ஃபிரீசரில் வைக்கவும்.

ஜி.எம்.எஸ் – ஸ்டெபிலைசர் கலக்கும் முறை;-

ஜி.எம்.எஸ் -ஐ அரை டம்ளர் பாலில் கலந்து வையுங்கள். ஸ்டெபிலைசருடன் 1 தேக்கரண்டி சர்க்கரையைக்(பொடிக்காதது) கலந்து வையுங்கள். இப்போது ஜி.எம்.எஸ் கலவையில் ஸ்டெபிலைசர் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கலக்கிக் கொண்டே வர வேண்டும். (அடுப்பில் வைக்க வேண்டாம்)

இப்போது ஜி.எம்.எஸ்- ஸ்டெபிலைசர் கலவை ரெடி.

Print Friendly, PDF & Email

Comment here