உமா சண்முகம்ஐஸ்க்ரீம் வகைகள்சமையல்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

உமா சண்முகம்

ஸ்ட்ராபெர்ரிப் பழங்களின் மேல் தோலைச் சுரண்டி விட்டு நடுவில் கீறிக் கொட்டையை எடுத்து விடுங்கள் (விதையில்லாத பழம் கிடைத்தால் நன்று.)அதில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர் என்று கடைகளில் விற்கும் ஜூஸ் பிழியும் மிஷினில் போட்டுப் பழச் சாற்றை எடுக்கவும். மிக்ஸியில் அடிக்க வேண்டாம். அந்த மிஷின் இல்லாதவர்கள் வேக வைத்த பழத்தை மத்தால் கடைந்து ஜல்லடையில் வடிகட்டலாம்.

தேவையான பொருட்கள்

பால் பவுடர் – 1 கப்
சர்க்கரை – 2 கப்
ப்ரெஷ் க்ரீம் – 1கப்
ஜி.எம்.எஸ் – 1/2 தேக்கரண்டி
ஸ்டெபிலைசர் – 1 தேக்கரண்டி
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் – 1கப்
ஸ்ட்ராபெர்ரி எஸென்ஸ் – 2 தேக்கரண்டி
பிங்க் கலர் – சில துளிகள்

செய்முறை:

பால் பவுடர், தண்ணீர் இரண்டையும் சேர்த்து பால் ரெடி செய்து கொள்ளவும்.

பின் சர்க்கரை, க்ரீம், எஸென்ஸ், கலர், தயாராக வைத்துள்ள ஸ்ட்ராபெர்ரி கலவையும், ஜி.எம்.எஸ்-ஸ்டெபிலைசர் கலவையையும் சேர்த்து விடுங்கள்.

இந்தக் கலவையை ட்ரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் செட் செய்யவும்.

Print Friendly, PDF & Email

Comment here