கறி வகைகள்சமையல்

கடாய் வெஜிடெபிள்ஸ்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்;-

காலி பிளவர், பீன்ஸ் கேரட், பட்டாணி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம்-2

குடைமிளகாய்-1

தக்காளி-2

வரமிளகாய்த்தூள்-1டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

அரைத்துக் கொள்ள;-

பெரிய வெங்காயம்

தக்காளி

கொத்தமல்லித்தூள்

வரமிளகாய்த்தூள்

முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் பெரிய பெரிய இதழ்களாக நறுக்கிப் செய்து

போடவும். குடமிளகாயையும் பெரிய துண்டாக நறுக்கிப்  போடவும்.  பூண்டையும் இஞ்சியையும் பொடியாக

நறுக்கிப் போடவும்.  அரைத்து வைத்த மசாலாவை போடவும்.  தேவையான உப்பு மஞ்சள்தூள் போடவும்.

வேக வைத்த காய்கறியைப் போடவும்.கடாய் பவுடரை தூவவும் (சீரகம் ,கொத்தமல்லி ,வரமிளகாய், சோம்பு

முதலியவற்றை வறுத்து அரைக்கவும்.) 1ஸ்பூன் மேத்தீ இலையைத் தூவவும். வெண்ணெய் பிரெஷ் கிரீம்

தேவையென்றால் சேர்க்கவும்.  கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சப்பாத்திக்கு ஏற்றது.

Print Friendly, PDF & Email

Comment here