சமையல்சிற்றுண்டி வகைகள்

கோதுமைப் புட்டு

உமா சண்முகம்

கோதுமைப் புட்டு

கோதுமை மாவு-200கிராம்

சர்க்கரை-100 கிராம்

ஏலக்காய்-3

தேங்காய்-1மூடி

உப்பு, எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

மாவை சலித்து வாசனை வரும்வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி

வைத்துக் கொள்ளுங்கள். உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து உதிரியாகப் பிசையுங்கள் .தண்ணீர்

அதிகமாக ஊற்றினால் மாவு திரண்டுவிடும். சிறிது சிறிதாக தெளித்துப் பிசைய வேண்டும். புட்டுக் குழாயில்

எண்ணெய் தேய்த்து முதலில் தேங்காய்ப்பூ, அடுத்து மாவு, அதன்மேல் சர்க்கரை என மாற்றி மாற்றி வைத்து

வேக வையுங்கள். வெந்ததும் இறக்கி உதிர்த்தால் கோதுமைப்புட்டு ரெடி. சர்க்கரையை புட்டுக் குழாயில்

கொட்டாமல் தனியாகவும் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம். வாழைப்பழம், பப்படம், வேகவைத்த

பச்சைப்பயிறு கலந்தும் பிசைந்து சாப்பிடலாம்.

Print Friendly, PDF & Email

Comments (1)

  1. Avatar

    hi

    thanks 4 ur samayal kuripugal

Comment here