சமையல்

தேங்காய் பால் சீரக கஞ்சி – நோன்பு கால சமையல்

 

ஜலீலாகமால்

குக்கரில் வேகவைக்க

உடைத்த அரிசி – 100 கிராம்

சீரகம் – 2 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

பூண்டு – 8 பல்

உப்பு – தேவைக்கு

தாளிக்க

எண்ணை + நெய் – 1 மேசை கரண்டி

பட்டை –  ½ இன்ச் சைஸ் ஒன்று

பொடியாக அரிந்த வெங்காயம் – 2 மேசைகரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட்  – ½ தேக்கரண்டி

பொடியாக அரிந்த கொத்துமல்லி தழை – 1 மேசைகரண்டி

கட்டி தேங்காய் பால் – 200 மில்லி

 

செய்முறை

அரிசியை களைந்து அதில் பூண்டு, மிளகு சீரகம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் (800 மில்லி) ஊற்றி குக்கரில் மிதமான தீயில் 4 விசில் வைத்து இறக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தேங்காய் பால் மற்றும் வெந்த கஞ்சியை கட்டியில்லாமல் மசித்து சேர்த்து தேவைக்கு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும்

கொத்துமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

பொட்டுக்கடலை துவையல் , பகோடாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

டிப்ஸ்:

நோன்புகாலங்களில் செய்யகூடிய அருமையான கஞ்சி. வாய் புண் வயிற்று, அல்சருக்கு ஏற்ற இதமான கஞ்சி.கர்ப்பிணி பெண்களுக்கு  சுகப்பிரசவம் ஆக இந்த கஞ்சியை கொடுத்தால் வாயு தொல்லை அகன்று சுகப்பிரசம் ஆகும்.பிரசவத்துக்கு பிறகும் இந்த கஞ்சியை குடித்தால் வயிற்றில் உள்ள் கேஸ் பிரப்ளம் குறையும். (பூண்டின் அளவை சற்று கூட்டி கொள்ளலாம்) குழந்தைகளுக்கும் ஆறு மாத்தில் இருந்து இந்த கஞ்சியை கொடுக்கலாம்.

இஸ்லாமிய இல்லங்களில் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பில் தினம் மாலை நோன்பு திறக்க செய்யும் பல வகை கஞ்சி (சூப்) வகைகளில் இது சிம்பிளான அதே நேரத்தில் அதிக மருத்துவகுணமுள்ள கஞ்சியாகும்.

 

Print Friendly, PDF & Email

Comment here