பழரச வகைகள்

அத்திப்பழ மில்க் ஷேக்

ஜலீலா கமால்

தேவையான பொருட்கள்
பழுத்த அத்திப்பழம் – 9 பழங்கள்
காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர்
சர்க்கரை – தேவைக்கு
ஐஸ் கட்டிகள் – 10  கட்டிகள்

செய்முறை

1 அத்திப்பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிகரிக்க வைக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. அத்திப் பழத்தை சுத்தமாக கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்

3.வெட்டிய பழத்தை தோல் தனியாக வரும் படி,  உள்ளிருக்கும் பழத்தை மட்டும் ஒரு ஸ்பூனினால்

வழித்தெடுக்கவும்.

4. மிக்சியில் ஐஸ் கட்டிகள், பால், சர்க்கரை,தோல் நீக்கிய அத்திப் பழங்கள்அனைத்தையும் சேர்த்து மிக்சியில்

5 நிமிடம் ஓடவிட்டு நல்ல நுரைபொங்க மிக்சியில் அடிக்கவும். வித்தியாசமான  சுவையில் ரொம்ப சத்தான

ஜூஸ் ரெடி.

பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு

தயார் செய்யும் நேரம்: 7 நிமிடம்

Print Friendly, PDF & Email

Comment here