சமையல்

பாலக் பனீர்

ஜெயஸ்ரீ ஷங்கர்

கீரை சீசன் வந்தாச்சு. நிறைய கட்டுக் கட்டாக பச்சை நிறத்தில் கீரைகள் வந்து குவியும். கீரைகளில் வடநாடுகளில் பாலக் கீரைக்கு ஒரு தனி மவுசு தான். ஆந்திராவில் தினம் பாலக் கீரையை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வார்கள்.
இப்போதெல்லாம் தமிழ் நாட்டிலும் பாலக் கீரை நிறைய கிடைக்கிறது. அதிக இரும்புச் சத்து, நார்ச்சத்தும்  நிறைந்தது.
சமைப்பது மிக எளிது. பாலக் கீரையை வைத்து பல விதங்களில் ருசியாக சமைக்கலாம். அதில் ஒன்று தான் பாலக் பனீர்.சமைத்து ரசித்து ருசியுங்கள்.ஆரோக்கியமான சைடு டிஷ் இது. இந்தப் பாலக் பனீரை விரும்பாதவர்களே கிடையாது.செய்ய மிக எளிமையானது, சுவையானது, சத்து நிறைந்தது.

தேவையானவை :

பாலக் 4 கட்டு
பனீர் 750 கிராம்
எண்ணை ஒரு டீஸ்பூன் /நெய்
ஃபிரெஷ் கிரீம் (தேவையானால் மட்டும்)
துருவிய பனீர் 1 ஸ்பூன் (மேலே தூவ)

அரைக்க வேண்டிய பொருட்கள் :
தனியாப்பொடி 1 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
பட்டை பொடி 1/2 ஸ்பூன்
சோம்புப் பொடி 1/2 ஸ்பூன்
ஏலக்காய் 2
(மேற்கூறிய பொடிகள் கைவசம் இல்லாவிடில்
பிரிஞ்சி மசாலாப் பொடியையும் சேர்க்கலாம் )
பெரிய வெங்காயம் 2
பூண்டு 2 பல்
கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி அளவு
ஒரு தக்காளி
பச்சை மிளகாய் 4

நன்கு விழுதாக அரைக்கவும்

செய்முறை:

முதலில் பாலக்கை, அலம்பி வேகவைத்து சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக  எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு  பனீரை  சின்னச் சின்ன கியூபாக துண்டுகள் செய்து கொண்டு லேசாக எண்ணையில்  போட்டுப் பொன்னிறமாக பொறித்து தனியாக  வைத்துக் கொள்ளவும் .

வாணலியில் எண்ணை விட்டு அரைத்த மசாலா விழுதை முதலில் போட்டு வதக்கவும். எண்ணைப் பிரிந்து வரும்போது, அரைத்து வைத்துள்ள கீரையை போடவும்.
உப்பு போடவும்.
நன்கு கலக்கவும்,
கொதிக்கவிடவும்.
பனீர் துண்டுகளை போடவும்.
வதக்கவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
ஒரு 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
துருவிய பனீர் அல்லது கிரீம் சேர்த்து  அலங்கரிக்கவும் .

அருமையான ‘பாலக் பனீர் ‘ தயார்.
சப்பாத்தி , நான், பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால்  பனீர் துண்டுகளை எண்ணையில் வறுக்காமலும் சேர்க்கலாம்.

.

Print Friendly, PDF & Email

Comment here