சட்னி வகைகள்சமையல்

முள்ளங்கி சட்னி

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி ———-100 கிராம்

பெரிய வெங்காயம் —–3

தேங்காய் ——–கால் மூடி

கடலைப்பருப்பு ———–1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ———1 டேபிள்ஸ்பூன்

சீரகம் ———1/2 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய்——–5

புளி ——– நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை ———1 கொத்து

எண்ணெய் ———–2 குழிக்கரண்டி

கடுகு ————–1/2 டீஸ்பூன்

உப்பு ———— தேவையான அளவு

செய்முறை:

முள்ளங்கியை பொடியாகவும் வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.

வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள். பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

தேங்காய் துருவல் புளி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்கள்.

அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டவும்.

Print Friendly, PDF & Email

Comment here