இனிப்பு வகைகள்

ஆலு அல்வா

உமா சண்முகம்

தேவையானவை:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு ————1 கப்

சர்க்கரை —————— 11/2 கப்

நெய் —————-1/2 கப்

திராட்சை —————–2 ஸ்பூன்

பாதாம் பருப்பு —————–10

ஏலக்காய்த்தூள் —————-1/2 ஸ்பூன்

தேங்காய்த்துருவல் ————— 3 ஸ்பூன்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு சர்க்கரையை போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.

நன்கு கலந்து கெட்டியாக அல்வா பதம் வரும் போது அடிப்பிடிக்காமல் இருக்க நெய் விட்டு கிளறவும்.

திராட்சை தேங்காய்த்துருவல் பாதாம் பருப்பு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் (துடுப்பால் எடுத்தால் தானாக விண் என்று விழ வேண்டும்) இறக்கிவிடவும்.

Print Friendly, PDF & Email

Comment here