சமையல்

மைசூர் போண்டா

உமா சண்முகம்

IMAG0119

தேவையான பொருட்கள்:

மைதா மாவு ——–1கப்

அரிசி மாவு ———1/4 கப்

சோடா மாவு ———1/2 டீஸ்பூன்

உப்பு ———–தேவையான அளவு

பச்சைமிளகாய் இஞ்சி பொடியாக நறுக்கியது—–2 டீஸ்பூன்

சீரகம் ————–1 டீஸ்பூன்

கருவேப்பில்லை பொடியாக நறுக்கியது—–சிறிது

எண்ணெய்————–தேவையான அளவு

புளித்த மோர் ———1 கப்

செய்முறை:

மைதாமாவு அரிசி மாவு உப்பு சோடாமாவு முதலியவற்றை ஒரு பவுலில் போட்டு புளித்த மோர் கொண்டு கரைக்கவும்.

மிகவும் கெட்டியாக பிசையாமல் சிறிது தளர்வாக பிசையவும்.

10 நிமிடம் ஊறவைக்கவும்.

சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய தேங்காய் முதலியவற்றை போட்டு எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

Print Friendly, PDF & Email

Comment here