சமையல்

பனானா ப்ரெட்

உமா சண்முகம்

 IMAG0124

தேவையான பொருட்கள்:

மைதா மாவு ——3கப்

சர்க்கரை ———11/2 கப்

வெண்ணெய்———3/4 கப்

பேக்கிங் பவுடர் —–1 டீஸ்பூன்

சோடா மாவு ——–1 டீஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ்—–1 டீஸ்பூன்

ரஸ்தாளி வாழைப்பழம்——-4

செய்முறை:

1. வெண்ணெயும் சர்க்கரையும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

2. கனிந்த வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

3. மைதா மாவையும் பேக்கிங் பவுடர் சோடாமாவு இவற்றையும் சலித்துக் கொள்ளவும்.

4. வெண்ணெய் சர்க்கரையுடன் வாழைப்பழத்தையும் மைதாமாவையும் சேர்க்கவும்.

5. இவற்றுடன் வெண்ணிலா எசன்சையும் சேர்க்கவும்.

இவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து வெண்ணெய் தடவிய ட்ரேயில் ஊற்றி கேக் ஒவனில் 30 நிமிடம் வைத்து இறக்கவும்.

Print Friendly, PDF & Email

Comment here