இனிப்பு வகைகள்சமையல்

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

உமா சண்முகம்

IMAG0137

தே​வையான ​​பொருட்கள்:

பால் —-250 மில்லி

முட்டை ——– 3

காரமல் சர்க்கரை —-4 டேபிள் ஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் —-4 சொட்டு

சர்க்கரை —-1/4 கப்

செய்முறை:

காரமல் சர்க்கரை செய்வதற்கு:

ஒரு பேனில் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு கிளறவேண்டும். நன்றாக கிளறி சர்க்கரை உருகி பிரவுன் ஆனவுடன் ஒரு பவுலில் ஊற்றவும்.

காய்ச்சிய பாலில் சர்க்கரையை கலக்கவும்.

முட்டையுடன் வெண்ணிலா எசன்ஸ்சையும் சேர்த்து நன்றாக அடிக்கவேண்டும்.

இவை இரண்டையும் ஒன்றாக கலந்து காரமல் சர்க்கரை கலந்த பவுலில் ஊற்றவேண்டும்.

இதனை ஒவனில் 15 நிமிடம் வைக்கவும். அல்லது குக்கரில் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதற்குள் காரமல் கஸ்டெர்ட் அடங்கிய பவுலை வைத்து 40 நிமிடம் வேக விட்டு இறக்கவும். (double boiling)

Print Friendly, PDF & Email

Comment here