அசைவ வகைகள்உமா சண்முகம்

பட்டர் சிக்கன்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள் ;-

butter

சிக்கன் எலும்பில்லாதது ——250 கிராம்

வெங்காயம் ————–1

தக்காளி ————– 2

வரமிளகாய்த்தூள் ——— 2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தூள் ——- 1 டீஸ்பூன்

இஞ்சிப்பூண்டு விழுது ——2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் ———2

முந்திரிபருப்பு ———-6

சீரகத்தூள் ———1டீஸ்பூன்

செய்முறை;-

1.ஒரு பவுலில் சிக்கனை போட்டு மிளகாய்த்தூள் 1டீஸ்பூன் கொத்தமல்லித்தூள் 1டீஸ்பூன் சீரகத்தூள் 1/2 டீஸ்

பூன் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் உப்பு மஞ்சத்தூள் சேர்த்து ஊறவைக்கவும்.

2.ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை போட்டு சிம்மரில் வைத்து ஃப்ரை பண்ணவும்.

ஃப்ரை பண்ண சிக்கனை எடுத்து தனியே வைக்கவும்.

3. அதே பேனில் சிறித ளவு எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வணக்கவும். நன்றாக

வணங்கியதும் தக்காளி சேர்த்து வனக்கவும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் மிள்காய்த்தூள்

கொத்தம்ல்லித்தூள் சேர்க்கவும். இஞ்சிப்பூண்டு போடவும். கசூரி மேத்தி (வெந்தயக்கீரை இலை)1 ஸ்பூன்

சேர்க்கவும்.முந்திரி போடவும்.இவை அனைத்தையும் வனக்கி அரைக்கவும்.

4.பேனில் வெண்ணெய் போட்டு அரைத்ததை போட்டு வணக்கவும். ஃப்ரை செய்த சிக்கனை போடவும்.

தக்காளி சாஸ் சிறிதளவு ஊற்றி பாலாடை க்ரீம் சேர்க்கவும்.கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

Print Friendly, PDF & Email

Comments (1)

  1. Avatar

    Butter chicken seyyum pothu paalaadai cream serppathu apidi yanraal yanna

Comment here