உமா சண்முகம்

பாசிப்பருப்பு தோசை (இனிப்பு)

உமா சண்முகம்

வகை வகையான தோசைகள்;-

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு தோசை.

அரிசிமாவும் உழுந்துமாவும் கலந்து சுட்ட தோசை முதல் சிறு தானியங்கள் வரை விதவிதமான தோசை வகைகள் உள்ளன.ரவா தோசை ,கோதுமை தோசை,பாசிப் பருப்பு தோசை,கேள்வரகு தோச சோளதோசை ,ஜவ்வரிசி தோசை சோயா பீன்ஸ் தோசை கம்பு தோசை,பனீர் தோசை , பப்பாளி தோசை புதீனா கொத்தமல்லி தோசை,கேரட் தோசை பீட்ரூட் தோசை , தக்காளி தோசை கல் தோசை,பருப்புப்பொடி தோசை,  ஒட்ஸ் தோசை என்று வித விதமான தோசைகள் உள்ளன.இவை ருசி மட்டும் அல்லாமல் உடலுக்கும் நல்லது. முதலில் பாசிப்பருப்பு தோசை பார்க்கலாம்.

பாசிப்பருப்பு தோசை (இனிப்பு)

தேவையான பொருட்கள்;-

பாசிப்பருப்பு அல்லது பச்சைப்பயிறு —— 1 கப்

பச்சரிசி —— 1/4 கப்

தேங்காய்த் துருவல் —- 2 டேபிள் ஸ்பூன்

வெல்லம் —— 11/4 கப்

ஏலக்காய் —— 2

எண்ணெய் ——- தேவையான அளவு

dosai

செய்முறை;-

1. அரிசி பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு தனித் தனியாக அரைத்து கலந்துக் கொள்ளவும்.

2.வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து வடிக்கட்டி மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

3.பொடித்த ஏலக்காய், தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலக்கவும்.

4.ஒரு கரண்டி மாவு விட்டு தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் விட்டு வெந்தவுடன் எடுத்து

சூடாகப் பறிமாறவும். விருப்பப்பட்டால் வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துத் தூவவும்.
இதனையே மாவு அரைத்தவுடன் உப்பு சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டும் சுடலாம்.

Print Friendly, PDF & Email

Comment here