உமா சண்முகம்சிற்றுண்டி வகைகள்

தோசை வகைகள் – கேழ்வரகு தோசை

உமா சண்முகம்

ard

தேவையானவை;-

கேழ்வரகு------- 1/4 கிலோ

உளுத்தம் பருப்பு----- கைப்பிடி அளவு

பச்சரிசி ---------------- 1/4 கப்

முருங்கைக்கீரை---- கைப்பிடிஅளவு

உப்பு எண்ணெய் ----- தேவையான அளவு.


செய்முறை;-

1.கேழ்வரகு பச்சரிசி உளுத்தம்பருப்பு இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

2. மாவை 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்க்கவும்.

3. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்  முருங்கைக்கீரை முதலியவற்றை

சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் என்ணெய் தேய்த்து  கனமான தோசையாக வார்க்கவும்.

இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் பரிமாறலாம்.

இதற்கு தொட்டுக் கொள்ள காரக் குழம்பு அபாரமாக இருக்கும்.


இனிப்பு கேழ்வரகு தோசை;-

அரைத்த மாவுடன் உப்புக்கு பதில் வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைந்தவுடன் மாவில்

சேர்த்து கனமான தோசையாக வார்க்கவும்.


பின்குறிப்பு;-

உடனடியாக தோசை வார்க்க வேண்டும் என்றால் மிஷினில் அரைத்த கேழ்வரகு மாவுடன் 1கப்

மாவிற்கு 2 கரண்டி புளித்த இட்லி மாவை கலந்தும் சுடலாம்.

 

Print Friendly, PDF & Email

Comment here