உமா சண்முகம்சிற்றுண்டி வகைகள்

ஜவ்வரிசி தோசை

உமா சண்முகம்

dosaic

தேவையான பொருட்கள்;-


ஜவ்வரிசி---------------------1 கப்

புழுங்கல் அரிசி---------------1 1/2கப்

பச்சை மிளகாய்---------5 பொடியாக நறுக்கியது

இஞ்சி-----------------------சிறிய துண்டு பொடியாக நறுக்கியது

வெங்காயம்---------1 பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை --------- 1 கொத்து

உப்பு எண்ணெய் ----- தேவையான அளவு


செய்முறை;-

1.ஜவ்வரிசியை  கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

அவ்வப்போது இதை கிளறினால் தான் முழுமையாக ஊறும்.

2.புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.அரிசி நன்கு அரைப்பட்டவுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து 

அரைக்கவும்.

3.உப்பு சேர்த்து மாவை 2 மணி நேரம் புளிக்க விடவும்.

4.கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்  கருவேப்பிலை சேர்த்து 

வதக்கவும். இதை மாவில் கொட்டி கலக்கவும்.

தோசைக்கல் சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்

புதினா சட்னியுடன்  சாப்பிட்டால் டேஸ்ட் கூடுதலாக இருக்கும்.

 

Print Friendly, PDF & Email

Comment here