உமா சண்முகம்சிற்றுண்டி வகைகள்

தக்காளி தோசை

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்;-

dosai

பச்சரிசி ——— 1கப்

புழுங்கல் அரிசி——1/2 கப்

நறுக்கிய தக்காளி —–1/4 கிலோ

காய்ந்த மிளகாய்——– 6

வெங்காயம் ————— 1

உப்பு எண்ணெய்——– தேவைக்கேற்ப

 

செய்முறை;-

 

1.இரண்டு அரிசியையும் 1மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி காய்ந்த மிளகாய் போட்டு வணக்கவும்.

ஆறியவுடன் மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்துக் கொள்ளவும்.

3. தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

4.தோசை கல்லை காய வைத்து மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

இதற்கு கார சட்னி தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

Print Friendly, PDF & Email

Comment here