உமா சண்முகம்சிற்றுண்டி வகைகள்

கீரை தோசை

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்;

 

புழுங்கல் அரிசி

பச்சரிசி ——– தலா 1கப்

உழுத்தம் பருப்பு ——-1/4 கப்

பாலக் கீரை ———-1 கப்

பச்சை மிளகாய் —3 விழுதாக அரைக்கவும்

சீரகம் —— 1 ஸ்பூன்

உப்பு —– தேவையான அளவு

 

dosa

செய்முறை;-

 

1. இரண்டு வகை அரிசியையும் உழுத்தம்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.

2.பாலக்கீரையை ஆய்ந்து சுடுதண்ணீரில் வேகவைத்து மிக்சியில் அரைக்கவும்.

3. அரைத்த கீரையை மாவுடன் கலந்து சீரகம் பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்க்கவும்.

தோசை கல்லில் எண்ணெ தேய்த்து மாவை வார்த்தெடுத்தால் கீரை தோசை தயார்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சுவையாக இருக்கும்.

குறிப்பு;- பாலக் கீரைக்கு பதிலாக வல்லாரைக் கீரை யும் சேர்க்கலாம்.

 

Print Friendly, PDF & Email

Comment here