உமா சண்முகம்சமையல்சர்பத் வகைகள்

லெமன் க்ரஷ்.

உமா சண்முகம்.

தக்காளி ஸ்குவாஷ்.

தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த தக்காளி -1 1/2 கிலோ.

தக்காளியை வேக வைத்து ஆறியவுடன் மிக்சியில் அடித்து வடி கட்டவும்.

ஒரு லிட்டர் ஜுஸ் இருந்தால் ஒன்றரை கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் மூன்றையும் சேர்த்து பாகு தயாரித்து ஆற வைத்து, தக்காளி ஜூஸுடன் கலக்கவும்.

டொமேடொ ரெட் கலரை தண்ணீரில் கரைத்து, 3/4 தேக்கரண்டி ‘சோடியம் பென்சோயேட்’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
லஸ்ஸி.

நான்கு கப் கெட்டித் தயிரில் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு,மற்றும் எட்டு தேக்கரண்டி சீனி போடவும்.

இதனை மிக்சியிலிட்டு ஐஸ் கட்டிகளும் போட்டு  நுரை வரும் வரை அடிக்கவும்.

இதனை உடனே குடிக்க வேண்டும்.
லெமன் க்ரஷ்.

ஒரு லிட்டர் எலுமிச்சை சாறு இருந்தால் இரண்டு கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பாகு தயாரிக்கவும்.

பாகு ஆறிய பின்பு  பழச் சாறு , லெமன் எசென்ஸ் 4 தேக்கரண்டி, சிறிதளவு லெமன் மஞ்சள் கலர் பவுடர்,  தண்ணீரில் கரைத்த 3/4 தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.

லெமன் பார்லி ஸ்குவாஷ்.

எலுமிச்சை பழச் சாறு 1 லிட்டர் இருந்தால் பார்லி மாவு 3 தேக்கரண்டி எடுத்து, கட்டி தட்டாமல் சிறிது  தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

1.6 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அத்துடன் கரைத்து வைத்திருக்கும் பார்லி மாவை கலக்கவும்.

மாவு வெந்த பின்பு 1.4 கிலோசீனி சேர்த்து, சீனி கரைந்ததும்சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு கலந்து வடி கட்டவும்.

பாகு நன்றாக ஆறியவுடன் பழச்சாறு, 2தேக்கரண்டி லெமன் எசென்ஸ், சிறிது தண்ணீரில் கரைத்த முக்கால் தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’  என்ற மருந்து மூன்றையும் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.

Print Friendly, PDF & Email

Comment here