சமையல்சிற்றுண்டி வகைகள்வசந்தா குகேசன்

சத்து மாவு அடை

வசந்தா குகேசன்

தேவையான பொருட்கள்

பார்லி -50 கிராம்

ராஜ்மா – 50 கிராம்

பாசிப்பருப்பு – 50 கிராம்

உளுத்தம் பருப்பு – 50 கிராம்

கொள்ளு – 50 கிராம்

சோயா -50 கிராம்

வரமிளகாய் – 5

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

சீரகம் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1 பெரியது

மல்லி இலை – சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை

ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, மல்லி இலையையும் பொடியாக நறுக்கிப் போட்டு அடை ஊற்றுவது போல் ஊற்றவும்.

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email

Comments (1)

  1. Avatar

    வசந்த அக்கா

    உங்கள் குறிப்புகள் எல்லாம் மிக அருமையாகவும் சத்தாகவும் இருக்கிறது
    வாழ்த்துக்கள்

Comment here