உமா சண்முகம்சமையல்பிஸ்கட் மற்றும் குக்கீஸ்

உப்பு பிஸ்கெட்

உமா சண்முகம்
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 500 கிராம்

சர்க்கரை – 150 கிராம்

வெண்ணெய் – 200 கிராம்

பால் – 200 மில்லி

உப்புத்தூள் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணெய், உப்பு ஆகியவைகளை ஒன்றாகக் கலந்து, பாலை விட்டு பூரி மாவைப் போலக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

2.மாவை வைத்து பூரி உருளைக் கட்டையால் ஆறு மில்லிமீட்டர் கனத்திற்கு உருட்டி மட்டம் செய்து முக்கோண அச்சு மூலம் வெட்டி எடுத்து ஒவனில் வைத்து பேக் செய்யவும்.

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email

Comment here