அசைவ வகைகள்சமையல்ஜலீலாகமால்

இறால் மட்டன் கீமா கபாப்

ஜலீலா கமால்

தேவையானவை
இறால் – 100 கிராம்
மட்டன் கீமா (கொத்திய ஆட்டுக் கறி) – 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்றரைத் தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் – அரைத் தேக்கரண்டி
தயிர் – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் – இரண்டு
உப்பு – ருசிக்கு தேவையான அளவு.
வெஙகாயம் – ஒன்று பெரியது
தேங்காய் துருவியது – மூன்று மேசை கரண்டி
கொத்துமல்லித் தழை – கால் கப்
முட்டை – ஒன்று
பொட்டுக் கடலைப் பொடி – கால் கப்
செய்முறை
1.கொத்திய கறியை சுத்தம் செய்து டீ வடிகட்டியில் தண்ணீரை வடிக்கவும்.
இறாலை அதன் முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து விட்டுச் சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.
2.கறியையும் இறாலையும் ஒன்றாகச் சேர்த்து அதில்  மிளகாய்த் தூள், உப்புத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், துருவிய தேங்காய், தயிர், கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய், இவற்றுடன் வெங்காயத்தையும் பொடியாக அரிந்து சேர்த்து  10 நிமிடம் சுருள விடவும்.
3.எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வரட்டியதும் கலவையை ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.
4.கடைசியாக முட்டையை நன்கு அடித்துக் கலவையுடன் சேர்த்துப் பொட்டுக்கடலைப் பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
5.வேண்டிய வடிவில் உருண்டையாகவோ, நீளவாக்கிலோ தட்டி தோசை தவ்வாவில்  எண்ணையை ஊற்றிப் பொரித்து எடுக்கவும். கிரில் வசதி கொண்டவர்கள் கிரில் செய்தும் எடுக்கலாம்.
சாதத்துடனும் சப்பாத்தி, குபூஸுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.
Print Friendly, PDF & Email

Comment here