அசைவ வகைகள்உமா சண்முகம்சமையல்சூப் வகைகள்

நண்டு சூப்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

நண்டு -2
வெங்காயம்-2
பச்சை மிளகாய் -2
மிளகு -4
தக்காளி -2
பெருங்காயத்தூள்-1/4 டிஸ்பூன்
மைதா -1டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை

நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் ஒரு தட்டுத் தட்டி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளியுங்கள்.

இதில் தக்காளி வெங்காயக் கலவையைப் போட்டு வதக்குங்கள். வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு  வேக வையுங்கள்.

வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து விடுங்கள். மைதாவை நீரில் கரைத்துக் கொதிக்கும் கலவையில் ஊற்றுங்கள்.

கலவை ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.

 

படத்திற்கு நன்றி:http://deliciousasianfood.net/2011/07/spicy-crab-soup-recipe

Print Friendly, PDF & Email

Comment here