சமையல்சிற்றுண்டி வகைகள்ஜலீலாகமால்

மேத்தி ரொட்டி,காலிப்ளவர் பீஸ் குருமா

ஜலீலா கமால்

மேத்தி ரொட்டிக்குத் தேவையானவை

கோதுமை மாவு – அரை கிலோ

எண்ணை – 1 மேசைகரண்டி

உப்பு – முக்கால் தேக்கரண்டி

வெந்தயகீரை(மேத்தி) – ஒரு கட்டு

எண்ணை – சுட தேவையான அளவு.

கரம் மசாலாப் பொடி – கால் தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி

காலிப்ளவர் பீஸ் குருமாவுக்குத் தேவையானவை.

காலிப்ளவர் – கால் கிலோ

பட்டாணி – 100 கிராம்

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி ,புதினா – சிறிது

தேங்காய்ப் பவுடர் – ஒரு மேசைக் கரண்டி

மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு தேவைக்கு

முந்திரி – 5

தாளிக்க

எண்ணை – நெய் – 1 மேசைக் கரண்டி

பட்டை, ஏலம், கிராம்பு – தலா ஒன்று

பிரியாணி இலை – ஒன்று சிறியது.

செய்முறை 

வெந்தயக் கீரையை அலசி ஆய்ந்து அத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாப் பொடி, மிளகாய்த்தூள்,  உப்பு, எண்ணை கலந்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

குருமாவுக்கு

காலிப்ளவர் பூவை தனித்தனியாகப் பிரித்தெடுத்து உப்பு கலந்த வென்னீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்துக் கழுவி எடுக்கவும்.

எண்ணையைக் காய வைத்துத் தாளிக்க கொடுத்துள்ளவைகளைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம் அரிந்து சேர்த்து வதக்கவும், வெங்காயம் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துப் பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி மடங்கியதும் மசாலா வகைகள், உப்பு கலந்து காலிப்ளவரையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

கடைசியாக முந்திரியைப் பொடித்து அத்துடன் தேங்காய்ப் பவுடர் சேர்த்து மிக்சியில் அரைத்து குருமாவில் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

 மேத்தி ரொட்டி

ரொட்டி மாவை 10 ரொட்டிகளாகப் பிரித்து சதுரவடிவமாகத் திரட்டி மாவில் எண்ணை தடவி குறுக்கும் நெடுக்குமாய் சதுரவடிவாக மடித்து மீண்டும் திரட்டி ரொட்டிகளாகச் சுட்டெடுக்கவும்.

சுவையான மேத்தி ரொட்டியும், காலிப்ளவர் பீஸ் குருமாவும் ரெடி.

Print Friendly, PDF & Email

Comment here