சமையல்சிற்றுண்டி வகைகள்

இந்திய வகை மேக்ரோனி

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

மேக்ரோனி -250 கிராம்

சாம்பார் வெங்காயம் -250 கிராம்

தனியாத்தூள்-2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் -2

தக்காளி சாஸ் -3 தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை-1/2 கட்டு

உப்பு -தேவைக்கேற்ப

செய்முறை

மேக்ரோனியை நன்றாக வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி நன்றாக வதக்கவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அரிந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய மேக்ரோனியை அதனுடன் சேர்க்கவும்.

மிளகாய்தூள், மஞ்சள்தூள்,மற்றும் தனியாத் தூளை அதனுடன் சேர்க்கவும். உப்பு சேர்த்துச் சுண்ட விடவும். பின்னர் தக்காளி சாஸ் மற்றும் அரிந்த கொத்தமல்லித் தழைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

சூடாகப் பரிமாறவும்.

 

படத்திற்கு நன்றி: http://indian-recipes-cuisines.blogspot.com/2009/04/indian-style-macaroni.html

Print Friendly, PDF & Email

Comments (1)

Comment here