உமா சண்முகம்சட்னி வகைகள்சமையல்

பீர்க்கங்காய் சட்னி

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் -2

பச்சை மிளகாய்-4

பூண்டு-4 பல்

முந்திரி -4

பொட்டுக்கடலை-1டீஸ்பூன்

கடுகு சீரகம் -1 டீஸ்பூன்

வெங்காயம்-1

புளி – நெல்லிக்காய் அளவு

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக வணக்க வேண்டும்.

முதலில் புளியை வணக்க வேண்டும். அதை எடுத்து வைத்து விட்டுப் பச்சை மிளகாய் வணக்க வேண்டும்.

பிறகு பச்சை மிளகாய் எடுத்து வைத்து விட்டுப் பூண்டு வணக்க வேண்டும்.

அடுத்தது முந்திரி, பொட்டுக்கடலை வணக்க வேண்டும்.

கடைசியாகக் கடுகு, சீரகம், வெங்காயம், பீர்க்கங்காய் வணக்க வேண்டும்.

இவை அனைத்தையும் தனித்தனியாக வணக்கி உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். சாதத்திற்கு ஏற்றது.

 

படத்திற்கு நன்றி: http://www.tajagroproducts.com/Ridge%20Gourd.html

Print Friendly, PDF & Email

Comment here