உமா சண்முகம்கறி வகைகள்சமையல்

முட்டை க்யூப் கறி

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்

முட்டை -4

வெங்காயம் -1

பச்சை மிளகாய் -2

மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்

உப்பு, மஞ்சள்தூள்-தேவையான அளவு

கொத்தமல்லித் தழை -தேவையான அளவு

செய்முறை

மேலே சொன்ன பொருட்களை முட்டையுடன் கலந்து நன்றாக அடித்து ஓவன் அல்லது பிரஷர் குக்கரில் 5 நிமிடம் வேக வைக்கவும். வெந்தவுடன் சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் போட்டு வணக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது போடவும்.

6 முந்திரி பருப்பை அரைத்து ஊற்றவும். பால் 2 டம்ளர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

சிறிது சுண்டியவுடன் 2 தக்காளி பியுரி(சுடுதண்ணீயில் கொதிக்க வைத்துத் தோல் உரித்து கடைந்து வடிக்கட்டவும்.)சேர்க்கவும்.

கிரேவி கெட்டியானவுடன் எக் கியூப் சேர்த்துப் பிரட்டவும். கொத்தமல்லிதழை தூவிப் பரிமாறவும்.

 

படத்திற்கு நன்றி: http://itscurrytime.blogspot.com/2009/08/egg-cubes-curryegg-paneer-curry.html

Print Friendly, PDF & Email

Comments (4)

 1. Avatar

  YOU MENTIONED 2 GLASS MILK. PLS TELL MILK OR COCONUT MILK ?

 2. Avatar

  milk only.notcoconut milk.

 3. Avatar

  ரொம்ப நல்ல இருக்கு உமா

 4. Avatar

  thankyou jaleela thankyou very much

Comment here