கறி வகைகள்சமையல்ஜலீலாகமால்

கத்திரிக்காய் சாம்பார்

ஜலீலா கமால்

தேவையானவை

வேக வைக்க

துவரம் பருப்பு – 50 கிராம்

மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 8

தாளிக்க

எண்ணை + நெய் – மூன்று தேக்கரண்டி

கடுகு – அரைத் தேக்கரண்டி

பூண்டு – இரண்டு பல்

கருவேப்பிலை – சிறிது

சின்ன வெங்காயம் – 6

தக்காளி ஒன்று – பெரியது

பெரிய கத்திரிக்காய் – ஒன்று (கால் கிலோ)

உப்பு தேவைக்கு

சாம்பார்ப் பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி

புளி– கொட்டைப் பாக்கு அளவு

கொத்து மல்லித் தழை – சிறிது

செய்முறை

1 . பருப்பை வேக வைத்து மசிக்கவும்.

2. தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக விடவும். தக்காளி வெந்ததும் கத்திரிக்காயை எட்டாக அரிந்து சேர்த்து வேக வைக்கவும்.

3. ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்த்து, புளியையும் கரைத்துச் சேர்த்து கொதிக்க விடவும்.

4. காய் வெந்து மசாலா வாடை அடங்கியதும் வேக வைத்த பருப்பை மசித்துச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான கத்திரிக்காய் சாம்பார் ரெடி.

Print Friendly, PDF & Email

Comment here