இனிப்பு வகைகள்கேக் வகைகள்சமையல்ஜலீலாகமால்

நியுடெல்லா சாக்லேட் மக் கேக்

ஜலீலா கமால்

நியுடெல்லாவை விரும்பாத குழந்தைகளே கிடையாது, ஜாமுக்கு பதில் இது ஒரு பாட்டில் வீட்டில் இருந்தால் போதும் பிள்ளைகளுக்கு சப்பாத்தி, இட்லி தோசை, பிரட், பன் அனைத்துக்கும் பொருந்தும்.

தேவையானவை

சாக்லேட் டிரிங் பவுடர் – 25 கிராம்

மைதா – 3 மேசைக் கரண்டி

கண்டென்ஸ்ட் மில்க் – 90 கிராம்

சர்க்கரை – 2 மேசைக் கரண்டி

நியுடெல்லா (Nutella)– 2 மேசைக் கரண்டி

பேக்கிங் பவுடர் – அரைத் தேக்கரண்டி

பிஸ்தா ஃப்லேக்ஸ் – 1 மேசைக் கரண்டி

பால் – 3 மேசைக் கரண்டி

முட்டை – 1

செய்முறை

1.பேக்கிங் பவுடர், மைதா, சாக்லேட் பவுடர் மூன்றையும் சலித்துக் கொள்ளவும்.

2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையையும், பட்டரையும் நன்கு கலக்கிக் க்ரீமாக்கவும்.

3. கலக்கிய பட்டர், சர்க்கரை கலவையில், முட்டை, மைதா, நியுடெல்லா, கண்டென்ஸ்ட் மில்க் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கலக்கவும்.

4. பிஸ்தா ப்ளேக்சைத் தூவி, மைக்ரோவேவ் சேஃப் மக்கில் கலக்கிய கலவையை ஊற்றி 3 நிமிடம் ஹையில் வைத்து இறக்கவும்.

4. ஆறியதும் எடுத்து உங்கள் செல்லக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

மிகவும் ஈசியாக, நினைத்த நேரம் உடனே 3 நிமிடத்தில் சட் பட் கிட்ஸ் மக் கேக் ரெடி. காஃபி மக்கில் செய்து வைப்பதால் அது பொங்கி வருவதைப் பார்க்க குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி.

பரிமாறும் அளவு : 3 குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 12 நிமிடம்

சமைக்கும் நேரம்: 3 நிமிடம்

Print Friendly, PDF & Email

Comment here