பெஞ்சமின் லெபோ

இயற் பெயர் : பெஞ்சமின் குடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு) பிறப்பு & வளர்ப்பு : ஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி படிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள் - புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி - சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை - தமிழ்) - பாம்பே : (அஞ்சல் வழி) BIET (British Institute of Engineering and Technology) மின்னியல் (Electronics) - திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை - ஆங்கிலம் - திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல் - சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன் - கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன் - புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு. பணிகள் : - புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் - கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி 'Banque Indosuez' -இல் முது நிலை அதிகாரி - பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் 'Christian Lacroix' -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator) - இந்த ஆண்டு முதல் பணி நிறைவு. பொதுப் பணிகள் : - பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் ​ - இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்) - கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்) - முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் ...போன்ற பல சங்கங்களின் ஆலோசகர் - (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்... தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி ... - ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர். - கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ' graphics' தெரிந்தவர் - சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் ('photography') ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது. - பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி . எழுத்துப் பணிகள் : - முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 - இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. 'ஆக்க வேலையில் அணுச் சக்தி' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. - 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை 'கவிஞனின் காதலி' முதல் பரிசைப் பெற்றது. - இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன. - 'எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருத்தமா? ' என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.

சிறு வயது குறும்புகள்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ   பட, பட, பட பட படார்...சட சட சடார் ...டமால் டுமீல்....... தீபாவளி நெருங்கி வருவதை உணர்த்தும் ஒலிகள். பழம் நினைவுகள்...

வகுப்பறை சிரிப்புகள்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ பொங்கல் கட்டுரை பொங்கலைப் பற்றித்தான் இருக்கவேண்டும் என்று எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? இல்லையே! பின்னே என்ன, பொங்கி வரும் சிரிப்புகளை அள்ளி விடும்...

மரி (மாரி)

புதுவை எழில் ஆகஸ்ட் மாதம் 15 --ஆம் நாள் சிறப்பை அனைவரும் அறிவர். இந்த நாளுக்கு இன்னும் ஒரு மகத்துவம் உண்டு. அது… கற்பனையும் வரலாறும் கலந்த...

பொங்கலோ பொங்கல்!

புதுவை எழில் பெருத்த வருத்தம் பச்சரிசிக்கு! வாசல் தோறும் மாக்கோலமாய் மணந்த காலம் மலை ஏறிவிட்டதே! அதுமட்டுமல்ல, பின்னே? உலை நீரில் உளைந்து கொதி நீரில் குழைந்தாலும்...