ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. தற்போது ‘நாடக உலகில் பெண்களின் பங்கு மற்றும் நிலை’ என்ற தலைப்பின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர், இப்பொழுது தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார். இவருக்கு இது வரை ஆறு முழு நீள நாடகங்கள் எழுதி, இயக்கிய அனுபவம் உண்டு. அவற்றில் ‘N.R.I’ என்ற நாடகம் ஷதாப்தீர கலாகார் என்ற ஒரிய கலை மற்றும் பண்பாட்டுக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இருபத்து மூன்றாவது அகில இந்திய நாடக விழாவில் தமிழ் நாடகமாக இடம் பெற்றது. மற்றுமொரு நாடகமான ‘சங்க இலக்கியத்தில் நட்பு’ (இருமொழி), உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில் மேடையேற்றப்பட்டது. இவை தவிர பிரபலமான ஐந்து ஒரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை (மொத்தம் 5 கதைகள்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அனுபவமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. தமிழ் இலக்கிய உலகில் தன் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே இவரின் லட்சியம்.

ஒரு வேப்பமரமும் சில சாமிகளும்

ஸ்ரீஜா வெங்கடேஷ் வேப்பமரத்தடியில நிண்ணு உச்சி மரத்தையே வெறிச்சுப் பாத்திக்கிட்டுருந்தா செல்வி. அவ கண்ணுல இருந்து தண்ணீ கொட்டிக்கிட்டே இருக்கு.சின்னப் புள்ளே , மிஞ்சிப் போனா வயசு...

பொங்கும் நினைவுகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் மீண்டும் ஒரு பொங்கல் இந்தக் காங்கிரீட் காடுகளில். என்ன பெரிய வித்தியாசம் தெரியப் போகிறது பொங்கல் சமயத்திற்கும் மற்ற சமயங்களுக்கும்? எப்போதும் போல கடைகளில்...