நான் குழந்தையாக மாறினேன்

0
விசாலம்

சிறுவர்கள் தினம் என்றவுடனே எனக்கும் சிறுமியாக மாற ஆசை வந்தது .குழந்தை என்றாலே நோ டென்சன் .களங்கமில்லாத உள்ளம் மகிழ்ச்சியான சூழ்நிலை ……… 

இது சாத்தியமா என்ன?ஆனால் கற்பனையில் இது சாத்தியமே என்று எண்ணி கற்பனையில் மூழ்கினேன் . மனதில் என் வயதைக்குறைத்து நான் ஒரு சிறுமி என்று என் மனதில ஒரு சிறுமியைப்பதித்தேன் , அப்படியே மீனுகுட்டியாக மாறினேன், நம் வல்லமைக்கு குழந்தைகள் தினம் பத்தி எழுதலாமே .இப்போது நான் மீனு குட்டி பேசறேன் எங்கம்மா சொல்லுவா இன்னும் எனக்கு மழலையே போலைனு . என் வாய்ல இன்னும் ”ள்” எழுத்து வரலை  “ல்”ன்னுதான் வரது .

உங்கல் எல்லோருக்கும் வணக்கம் நான் சின்ன பொண்ணு பேசறேன் ஏன் தெரியுமா?இன்னிக்கி நவம்பர் 14 .     அதான் எங்கல் தினம் புரிலையா அதான் குழந்தைகள் தினம் ,,,இன்னிக்கி எங்களுக்கு ரொம்ப மஜாதான் ,   என்ன மஜா னு கேட்கறீங்க்லா?     வந்து,,,,வந்து,,,எங்க ஸ்கூல்லே முதல் நாளே பிஸ்கெட் சாக்கலேட்டு எல்லாம் தருவா எங்க மிஸ் . நேரு சாச்சா படம் வச்சு அதுக்கு ரோஜாப்பூ மாலையும் போட்டு அவரைப்பத்தி நிறைய சம்பவம் சொல்லுவா..

எங்கம்மா ரொம்ப நல்ல அம்மா, நிறைய கதை சொல்லுவாங்க .காந்தி தாத்தா .சாச்சா நேரு . விவேகானந்தர் சிவாஜின்னு நிறைய கதை நேக்கு தெரியும் . இன்னிக்கி ஸ்கூல் லீவு .

எங்கம்மா சொன்னா…….வந்து,,,வந்து, இன்னிக்கி சாச்சா நேஹ்ரு பிறந்த நாளாம் ,எங்கம்மா சொன்னா..  அவருக்கு குழந்தைகல்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.      அவர் சட்டேல எப்போதும் ரோஜாப்பூ வச்சுப்பாராம் .   அவர் சொல்வாராம் நாங்கள்லாம் தோட்டத்தில் வளரும் அழகான மொட்டுக்கல்னு.,, அப்புறம் வந்து ,,,வந்து,,நாங்கல்லாம் இப்ப குழந்தைகல்தானாம் ,,, ஆனாக்க பின்னாலே வரப் போற சிடிசனாம் அம்மா சொன்னா ….,,

ஆமாம் சிடிசன்னா என்ன?……..   இன்னும் என்ன சொன்னா எங்கம்மா ,,,,,,மறந்துப்போச்சே…  ஹா ஞாபகம் வந்திடுச்சு.     குழந்தைகல் தான் இந்தியாவை இன்னும் சிறப்பாக்கற அஸ்திவாரமாம்,நான் சின்னவ அதனாலே நான் அவரைப் பாத்ததில்லை “அம்மா அம்மா சாச்சா நேருஜி எப்படி இருப்பார்னு கேட்டேன் .” இரு வரேன்ன்னு சொல்லிட்டு ஒரு போட்டோ எடுத்துண்டு வந்தா. அதுலே நேருஜி பக்கத்லெ எங்கம்மா நிக்கறா . அவர் எங்கம்மாவுக்கு பரிசு கொடுக்கும் போட்டோ ..அம்மா என் கையிலே போட்டோ கொடுத்தா.      நல்ல வெள்ளைத் தொப்பியோட சிரிச்சிண்டு சட்டைலே ரோஜா சொருகிண்டு ஜம்னு இருந்தார் ,பார்க்க ரொம்ப அழகு ஒரு ராஜகுமாரன் போல் .அவர் ரொம்ப பணக்காரராம் நம் நாட்டுக்குரொம்ப சேவை செஞ்சிருக்காராம் .இந்தியா சுதந்திரம் ஆக ரொம்ப பாடுபட்டாராம்
குழந்தைகல்னா அணைச்சு சிரிச்சு பேசி மகிழ்வராம் ,குழந்தைகள்னா அவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம் . அதான் அவர் பிறந்த நாளை குழந்தை தினமா கொண்டாடறான்னு என் அம்மா சொன்னா அத்தோட உலக கருணை தினமும் இன்னிக்கித்தான்.
எல்லார்ட்டேயும் நாம ரொம்ப பாசத்தோட கருணையோட அன்போட் இருக்கணும் . அப்போத்தான் நாம் நல்ல பேரு வாங்கமுடியும்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாங்க .இன்னிக்கி நான்” குழந்தைகள் தினம் ” எப்படி கொண்டாடப் போறேன் தெரிமா ?.நிறைய சாக்லேட் வாங்கிண்டு வந்து ரமேஷ், கீது, சுரேஷ் அப்பறம் உதவும் கரங்கள்” இடத்துக்குப்போய் எல்லாருக்கும் கொடுப்பேன் என் அப்பா அழைசுண்டு போவார், எனக்கு எங்கம்மா ஔவையார் படப் போட்டுக் காட்டுவா நான் சூப்பர் ஸ்டார்ரும் பாப்பேன்னு சொன்னேன் சரி ராகவேந்த்த்ரா படம் காட்றேன்னு சொல்லிருக்கா. சாயங்காலமா மேலா அழைசிண்டு போவாளே ஹாய் ஜாலி அங்கு ராட்டினம் சுத்துவேன் நிறைய விளையாட்டு இருக்கும். நான் ஒன்னு கேக்கறேன் எங்களுக்குன்னு ஒரு நல்ல  டிவி சேனலாரம்பிச்சு அதிலே எங்கம்மா கதை சொல்லுவதுபோல அரிச்சந்த்ரன் ராமதாஸ் சிவாஜி கட்டப்பொம்மன் தேசத்தலைவர்கள் எல்லாம் அனிமேஷன் போல செஞ்சு காட்டுங்களேன்
ஆஆ சொல்ல மறந்துட்டேனே எங்கிட்ட ஹனுமான் அனிமேஷ்ன் படம் இருக்கே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயோ ,,,வளவளனு பேசிண்டே போறேன் இந்தக் குழந்தைகள் தினத்திலே எங்களை வாழ்துங்கோ பார்க்கலாம்.
பி.கு, குழந்தையாக மாற ஆசை ஆகையால் இந்தக் குழந்தைகள் தினத்தில் கற்பனைக்குழந்தையாக மாறிஎன் ஆசையைத் தீர்த்துக் கொண்டேன் அப்பா எவ்வளவு நிம்மதியாக் இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *